Pages

Wednesday, November 23, 2016

முடி உதிர்வைத் தடுக்கும் கொய்யா இலை!!

பிசுபிசு தோல் பாதுகாப்பிற்கு......

ஒரு சிறிய பவுலில் 3 டீஸ்பூன், அரிசி மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1
டீஸ்பூன் தேன் மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ் சேர்த்து, பேஸ்ட் போல் கலந்து கொண்டு, சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

முதல் நாள் இரவு 10 பாதாமை நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் ஆக செய்து, சிறிது தேன் சேர்த்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவுங்கள்.

தக்காளி சாறு எடுத்து, அதில் 3 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து அதனை முகத்தில் தடவி, 15 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முல்தானி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைத்து, பின் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து துடைத்து எடுத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ராகி ரொட்டி

ragi rotti க்கான பட முடிவு

 தேவையானவை:

  • ராகி மாவு - அரை கிலோ

  • சாம்பார் வெங்காயம் - 100 கிராம்

  • முருங்கைக்கீரை - அரை கட்டு (ஒரு கப்)

  • தேங்காய் - அரை முடி (துருவியது)

  • பச்சைமிளகாய் - 3

  • உப்பு - தேவைக்கு

  • எண்ணெய் - தேவைக்கு
செய்முறை

கீரையை ஆய்ந்து கழுவி வைக்கவும். வெங்காயம், மிளகாயை நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மிளகாய் போட்டு தாளிக்கவும். அதில் கீரையை போட்டு வதக்கவும். அகலமான பாத்திரத்தில் மாவு, வதக்கிய கீரை, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி உருண்டையை விட கொஞ்சம் பெரிதாக எடுத்துக் கொண்டு ஒரு பாலித்தீன் கவரில் சிறிது எண்ணெய் தடவி அதில் வைத்து தட்டவும்.

அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் தட்டிய ரொட்டியை போட்டு எண்ணெய் விட்டு மிதமான தீயில் இரு புறமும் திருப்பி போட்டு சுடவும். ( ரொட்டியின் நடுவில் தோசை திருப்பியால் லேசாக கீறவும் அப்போது தான் உள்ளேயும் சீக்கிரம் வேகும்)ரொட்டி வெந்ததும் எடுத்து விடவும். சுவையான முருங்கைக்கீரை ராகி ரொட்டி ரெடி. தேங்காய் சட்னி வைத்து சாப்பிடலாம்.

கூந்தல் பளபளப்பாக இருக்க....

சாப்பிடும்போது என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

தூதுவளையின் மருத்துவப் பயன்கள்