Pages

Wednesday, November 23, 2016

பிசுபிசு தோல் பாதுகாப்பிற்கு......

ஒரு சிறிய பவுலில் 3 டீஸ்பூன், அரிசி மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1
டீஸ்பூன் தேன் மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ் சேர்த்து, பேஸ்ட் போல் கலந்து கொண்டு, சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

முதல் நாள் இரவு 10 பாதாமை நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் ஆக செய்து, சிறிது தேன் சேர்த்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவுங்கள்.

தக்காளி சாறு எடுத்து, அதில் 3 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து அதனை முகத்தில் தடவி, 15 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முல்தானி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைத்து, பின் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து துடைத்து எடுத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

No comments: