Pages

Friday, October 7, 2016

போதையேற்றினால் மூளை சுறுசுறுப்பாக இருப்பதாக, 'குடி'மகன்கள் கூறுகின்றனரே ?



முற்றிலும் தவறான தகவல். 12 முதல் 30 வயது வரை உள்ளோர், மது பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இந்த வயதில் ஏற்படும் பழக்கம், 65 வயதிற்கு மேல் தான் குறைகிறது.

கல்லூரி மாணவர்கள், மதுவை ஒரு நாகரிக பானமாக கருதி, குடிக்கின்றனர். மது மூளையைச் சோர்வடையச் செய்யும். தேவையற்ற மனக் குழப்பத்தை உருவாக்கும். வேலை திறன் மற்றும் படிப்பாற்றலைக் குறைக்கும்.

Wednesday, October 5, 2016

உதடுக்கு மேல கருப்பா இருக்கா? இத ட்ரை பண்ணுங்க....

சிலருக்கு ஹார்மோன் காரணத்தினால், அதிகமாக முடி வளரும். அதனால் முகத்தில் எல்லாம் முடியானது வளர்ச்சி அடையும். சிலருக்கு மீசை இருப்பது போல கூட இருக்கும். ஆகவே உதட்டிற்கு மேல் உள்ள பகுதி கருமையான நிறத்தில் காயப்படும். எனவே அத்தகைய கருமையான தோற்றத்தை ஏற்படுத்தும் முடியை நீக்க சிலர் த்ரெட்டிங் செய்வார்கள். இதனால் கடுமையான வலி தான் ஏற்படும். மேலும் இந்த கருமை நிறம் ஏற்படுவதற்கு அதிக சூரிய வெப்பம் சருமத்தில் படுவதும், ஆரோக்கியமற்ற சில உணவுகளும் தான் உதட்டிற்கு மேல் கருமையை ஏற்படுத்துகிறது. ஆகவே அத்தகைய வலி ஏற்படாமல், ஈஸியாக அந்த பிரச்சனையை சரிசெய்ய வீட்டிலேயே மருந்துகள் இருக்கின்றன. அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

உதட்டிற்கு மேலே இருக்கும் கருமையை போக்க சில டிப்ஸ்...

உடனடியாக போக்குவதற்கு...

* உதட்டிற்கு மேலே ஃபேஸ் ப்ளீச்சை தடவி, பின் சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் அதிலுள்ள பொருள் உடனடியாக கருமை நிறத்தை போக்கிவிடும்.

வீட்டு மருந்துகள்...

* உதட்டின் மேல் பகுதியை எலுமிச்சை, தேன் அல்லது தயிரால் நன்கு ப்ளீச் செய்து வந்தால், நாளடைவில் அந்த இடத்தில் உள்ள கருமை நீங்கிவிடும்.

* முகத்தை ஆப்ரிகாட், பாதாம் அல்லது கடலை மாவால் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் சுத்தமாக, பளிச்சென்று காணப்படும்.

* இல்லையெனில் பீட்ரூட் அல்லது மாதுளையின் ஜூஸை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்தால், முகத்தின் நிறம் சற்று அதிகரித்து, புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

கருமை நிறத்தை வராமல் எப்படி தடுக்கலாம்?

* ஆல்கஹால், காஃப்பைன் மற்றும் புகையிலை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உதட்டின் நிறத்தை மாற்றுவதோடு, பற்கள் மற்றும உதட்டிற்கு மேலேயும் கருமையை உண்டாக்கும்.

* ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீரையாவது குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள கழிவுகள் நீங்கிவிடும். மேலும் சருமம் நன்கு சுத்தமாக, பொலிவோடு காணப்படும்.

* உதட்டிற்கு கெமிக்கல் கலந்த மிகவும் அடர்ந்த நிற லிப்ஸ்டிக், லிப் பாம் போடுவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக இயற்கை லிப் பாம்களான நெய், வெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தினால், உதடு வறட்சி அடையாமல் இருக்கும்.

Monday, September 19, 2016

வாய் விட்டு சிரிங்க சர்க்கரை குறையும்!


பொதுவாக நன்றாக சிரிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் வர வாய்ப்பு குறைவு. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், நல்ல மூடும் உருவாகும். என்றெல்லாம் முன்பே சொல்லப்பட்டன.

இப்போது, டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் நன்றாக வாய் விட்டு சிரித்தால், சாப்பாட்டிற்குப் பிறகு ஏறும் குளுக்கோஸின் அளவு குறையும் என்கிறார்கள். இந்நோய் உள்ளவர்களை இரண்டு தனித் தனி நாட்களில் பரிசோதித்துப் பார்த்து, இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஒரு நாள் சீரியசான விரிவுரையை கேட்க வைத்திருக்கிறார்கள். இனொரு நாள் நன்றாக வாய்விட்டுச் சிரிக்கும் காமெடி நிகழ்ச்சியில் பங்குகொள்ள வைத்திருக்கிறார்கள். சீரியசான விரிவுரையை கேட்ட நாளை விட, காமெடி நிகழ்ச்சியில் கலந்து வாய் விட்டு சிரித்த நாளில், அவர்களின் குளுகோஸ் அளவு குறிப்பிட்ட அளவு குறைந்திருந்ததாம்.

உயர் ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் அடிக்கடி மாறி மாறி, இதய நோய், இதய தாக்கம் என்று கொண்டு போய் விடுகின்றன. ஆனால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருந்தால் 44 சதவீத சர்க்கரை நோய் தொடர்பான தாக்கம் வராது என்கிறார்கள்.

சர்க்கரை நோய் வந்த பின்னர், அதைக்  கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடுத்துக்கொள்ளும் சிரத்தில் கொஞ்சமாவது அந்நோய் வரும்முன் காட்டினால் போதும். சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கலாம். சர்க்கரை நோயை தடுப்பது என்பது, அதனுடன் தொடர்புடைய இதய நோய்கள், கிட்னி பிரச்சனைகள் வராமல் காப்பதற்கு சமமானதாகும்.

முடி உதிர்வதை தடுக்க


 shini hair in indian girl க்கான பட முடிவு


முடி உதிர்வதை தடுக்க வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து மறுநாள் வேகவைத்து நீரை கொண்டு தலை முழுகி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும்.  பேன் நீங்கும். 

முடி உதிர்வதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.  அவை உடல் சூடு, வைட்டமின் குறைபாடு, மற்றும் பரம்பரை காரணமும் முக்கிய பங்குண்டு.  அதேநேரம் நீங்கள் உங்களின் தற்காப்பு உத்தியை செய்ய அதன் தாக்கம் குறைய வாய்ப்புண்டு.


நீங்கள் வாரத்திற்கு இருமுறை செம்பருத்தி இலையை தலையில் பூசி சிறிது நேரம் கழித்து தலைக்கு சோப்பு மற்றும் ஷாம்பூ போடாமல் குளித்து வர நல்ல பலன் கிடைக்கும்.  ஏனென்றால் செம்பருத்தி இலை குளிர் படம் கொடுக்கும் அதேநேரம் இது ஷாம்பூ போன்ற நுரைக்கும் தன்மை கொண்டது. எனவே ஷாம்போ, சோப்போ தேவையில்லை.

தலைக்கு நல்லெண்ணெய் வாரத்திற்கு ஒருமுறை தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும். அதே போல் உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து வந்தால் உடல் சூடு குறையும்.

 

Sunday, September 18, 2016

விபத்துக்களில் சிக்கி தலையில் அடிபட்டால் பிழைப்பது கடினமா?


ஆண்டுதோறும், 20 லட்சம் மக்கள், விபத்துக்களில் சிக்குகின்றனர். அதில் 10 லட்சம் பேர் இறக்கின்றனர். மது அருந்தி விபத்துக்குள்ளனோர், 20 சதவீதம் பேர் . 10 நிமிடத்திற்கு ஒரு நபர், மூளை காயத்தால், இறக்கின்றனர்.

தலைக்கவசம் அணிவது, மது குடித்து போதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது, சாலை விதிகளை சரியாக கடை பிடிப்பது, அதிவேக பயணம் செய்வதை கட்டுப்படுத்துவது ஆகியவை மூலம், இந்த பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

வயிற்றுத் தசையை வலுப்படுத்தும் பாரிஹாசனம்

செய்முறை:  

விரிப்பில் முழங்கால்களை மடக்கி முட்டி போட்டு உட்காரவும். வலது காலை வலது பக்கமாக நீட்டவும். வலது பக்க நுனிக் காலைத் திருப்பி வலது பாதம் தரையில் பதிக்கும் படி வைக்கவும். கைகள் இரண்டையும் பக்கவாட்டில் உயர்த்தவும். வலது கையையும், இடுப்பையும் வலது பக்கமாகத் திருப்பி வலது கை, கணுக்கால்கள் வழியாக வலது காலின் மேல் பாதத்தை தொடட்டும்.

இடது கரத்தைத் தலைக்கு மேலாக உயர்த்தி, இடது உள்ளங்கை வலது உள்ளங்கைக்கு மேலே வருவது போல் வைக்கவும். இடது கை இடது காதைத் தொட்டவாறு வர வேண்டும். இறுதி நிலையில் சாதாரண சுவாசம் மேற்கொண்டு மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு மறுபக்கமும் இதே போல் செய்யவும். இதே போல் இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:
1. வயிற்றுத் தசைகள் பலம்பெறும்.
2. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.
3. கை, கால் வலுப்பெரும்.

மலச்சிக்கலை போக்கும் சாம ஆசனம்


செய்முறை:

விரிப்பில் பத்மாசனம் செய்வது போல் வலது காலை இடது தொடையிலும், இடது காலை வலது தொடையிலும் வைக்கவும். உள்ளங்கைகள் மேலே பார்த்தவாறு இடது கை மேல் வலது கையை வைக்க வேண்டும். முழங்கால் தரையில் பதிய நேராக அமரவும்.

சுமார் 3 விநாடிகள் இதே நிலையிலிருந்து சாதாரணமாக சுவாசிக்கவும். பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு 10 நிமிடம் செய்யவும்.

பலன்கள்:

1. நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது.

2. வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ஜீரணசக்தி அதிகரிக்கிறது.

3. தலைவலி, மலச்சிக்கல் ஆகியவை நீங்குகிறது.

4. கால்களும், முதுகுத்தண்டும் பலம் பெறுகின்றன.