Pages

Friday, July 15, 2016

கொத்தமல்லி சாண்ட்விச்


 coriander sandwich

என்னென்ன தேவை?

பிரெட் - 4 ஸ்லைஸ்,
வெண்ணெய் - தேவைக் கேற்ப,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
பொடியாக நறுக்கிய பெரிய தக்காளி - 2,
உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க...

கொத்தமல்லி - 3/4 கப்,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - 1/2 இஞ்சி துண்டு.

எப்படிச் செய்வது?  

அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியுடன், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இரண்டு பிரெட் துண்டுகளுக்கு நடுவே தேவையான அளவு இந்த விழுதை வைத்து நன்கு மூடவும். தவாவில் வெண்ணெய் சேர்த்து, பிரெட்டை இரண்டு பக்கமும் நன்கு டோஸ்டு செய்து எடுக்கவும். சாஸுடன் பரிமாறவும்.

முகத்தை கழுவ எந்த ஃபேஷ் வாஷ் சிறந்தது


பலர் முகம் கழுவுகிறேன் என்று ஏனோதானோவென்று கண்ட கண்ட ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி கழுவுவார்கள். முகம் கழுவும் போது அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் சில பெண்களுக்கு ஃபேஷ் வாஷ் செய்யும் போது பின்பற்ற வேண்டியவைகள் மற்றும் பின்பற்றக்கூடாதவைகள் பற்றி தெரியவில்லை. அதனால் பெண்கள் பல சரும பிரச்சனைகளை சந்தித்து, சருமத்தின் அழகையே கெடுத்துக் கொள்கிறார்கள். சருமத்திற்கு ஏற்ற ஃபேஷ் வாஷை பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களின் சருமத்திற்கு ஏற்றதை தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல நறுமணமிக்க ஃபேஷ் வாஷைப் பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல்கள் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும். முடிந்த அளவு மைல்டு ஃபேஷ் வாஷை பயன்படுத்துவது தான் சருமத்திற்கு நல்லது.

குளிர்காலத்தில் தினமும் 2 முறை ஃபேஷ் வாஷ் பயன்படுத்தியும், அதுவே கோடைக்காலமாக இருந்தால் மூன்று முறையும் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். முக்கியமாக கழுவிய பின் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.

மேலும் ஃபேஷ் வாஷ் பயன்படுத்திய உடனே வெயிலில் செல்லக்கூடாது. அதுமட்டுமின்றி, முகம் கழுவிய பின்னர் சிறிது நேரம் கழித்தே சன் ஸ்க்ரீன் லோசனைப் பயன்படுத்த வேண்டும். முகத்தை கடுமையாக தேய்த்து கழுவக்கூடாது. கழுவி முடித்த பின் மென்மையாக முகத்தை துடைக்க வேண்டும்.

அல்லது மென்மையான டவலால் ஒற்றி எடுக்க வேண்டும். மேக்கப்பை நீக்க ஃபேஷ் வாஷைப் பயன்படுத்தக் கூடாது. அதற்கு மேக்கப் ரிமூவர் அல்லது நல்ல மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தியே நீக்க வேண்டும். அப்படி மேக்கப்பை நீக்கிய பின் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவவும். சிம்பிளாக மைல்டு ஃபேஷ் வாஷை பயன்படுத்தி முகத்தைக் கழுவினாலே போதுமானது. 

மறதி நோய் என்றால் என்ன?


மறதி நோய் என்பது, 60 வயதிற்கு மேலான முதியோரை தாக்கும், ஞபாக சக்தி, கொஞ்சம் கொஞ்சமாக குறையும். சரியான புரிதல் திறன் இருக்காது.

இதய நோய் தாக்குதலுக்கு காரணமான, ரத்த அழுத்தம், நீரழிவு பாதிப்பு
கொழுப்புச் சத்து, அடிபட்டு  தலையில் காயம் ஏற்படுதளாலும், இந்த நோய் வருகிறது.

நம் மூளையின் திறனை சரியான விகிதத்தில் பயன்படுத்தினால், இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். அதாவது படித்தல், அதிகமாக அறிதல் திறனை வளர்ப்பது, மறதி நோயை தடுக்க உதவும்.

Thursday, July 14, 2016

இளம் நரையா - இதைப் படிங்க முதல்ல

உங்களுக்கு இளநரை வந்து விட்டதே என்று கவலைப் பட வேண்டாம். அதற்கு கறுப்பு எள் உபயோகமாகும். கால் கிலோ கறுப்பு எள்ளை தண்ணீரில் ஊற வைங்க. இரண்டு மணி நேரம் கழிச்சு எள்ளை மையமாக அரைத்து தலைக்கு பூசி குளிக்கவும். தொடர்ந்து செய்து வந்தால் எப்பேர்ப்பட்ட இளநரையும் இல்லாது போகும்.

சிலருக்கு "டிரை ஸ்கால்ப்" பிரச்சினை இருக்கும். மண்டையை சொரிந்தாலே வெள்ளையாக தோல் பிய்ந்து வரும். அரிக்கும். கொஞ்சம் அசட்டையாக இருந்தால் அந்த இடத்தில் முடி கொட்டி போகும்.

இந்த பிரச்சினைக்கு வால் மிளகு, பிஞ்சு கடுக்காய் காம்பினேஷன் நன்றாக பயன் தரும். வால் மிளகையும், பேபி கடுக்காயையும் மையாக அரைத்து தலையில் பூசி குளிக்கவும். மண்டையின் மேல் தோல் ஆரோக்கியமாவதோடு, முடி கொட்டுவதும் டக்கென்று நின்று விடும்.

ஒரு சில பெண்களுக்கு மெல்லிய மீசை வளர்வதுண்டு. மேலும், சிலருக்கு கை, கால் எல்லாம் முடி வளர்ந்து அழகியே குலைத்து விடும்.

குப்பை மேனி இலை, வேப்பிலை, விராலி மஞ்சள் இம்மூன்றையும் சம அளவு எடுத்து, அரைத்து வைத்துக் கொள்ளவும். இரவு படுக்கப் போகும் முன்பு, ரோமம் உள்ள இடங்களில் பூசி வர, சில நாட்களில் முடி உதிர்ந்து விடும். மேனியும் பெண்மையில் பொலிவோடு மிளிரும்.

முட்டையின் வெள்ளைக் கருவை மிக்ஸியில் அடிக்கவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் எண்ணெய் கலந்து, தலையின் மயிர்க் கால்களில் ஊடுருவிச் சொல்லும்படியாக அழுத்தமாக தேய்க்க வேண்டும். இயற்கையான கண்டிஷனரோடு உங்கள் கூந்தலுக்கு எழிலூட்டும்.

Wednesday, July 13, 2016

மூளையின் செயல்பாட்டால் என்ன நடக்கிறது?


மொழித்திறன், செயல்திறன், புலனறிவு, நினைவாற்றல் ஆகியவற்றுக்கு, மூளையின் இயக்கமே காரணம்.

விரிவாக சொல்வது என்றால், அன்றாட அடிப்படை திறமை சார்ந்த மற்றும் ஒய்வு சார்ந்த வேலைகளை, சரியாக, சீராக, முறையாக செய்தல், அறிதல் மற்றும் புரிதல் திறனுடன் சூழ்நிலைகேற்ப செயல்படுதல், உடல் மற்றும் புலன் ஆகியவை முழுமையாக இயங்க, மூளையின் செயல்பாடு முக்கியம்.

மன நோயை அறியும் அறிகுறிகள் இதுதான் !


மனம், அறிவு, உணர்வு, நினைவாற்றல், விருப்பம், ஒழுக்கம், நடவடிக்கை, செயல் இவற்றின் மாறுபாட்டை மன நோய் என அறிந்துக்கொள்ள வேண்டும். மனநோய் என்றால் ஆயுர்வேதத்தில் மட்டுமே குணப்படுத்த முடியும் என பழங்காலத்தில் நம்பிக்கை இருந்தது.

பழங்காலத்தில் மன நோய்கள் உள்ளவர்களை சங்கிலியால், கட்டி கோவிலை சுற்றி வலம் வர வைப்பது, அடிப்பது இவை தன சிகிச்சை. சமூகத்தில் மன நோய்யை பற்றிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. ஆயுர்வேதத்தை பொருத்தவரை மனது தான். மனித சிந்தனைகளின் பிறப்பிடம். மனிதன் இறந்தால், மூளையும் இறந்துவிடும். நவீன மருத்துவ முறைகளை பொறுத்த வரை மூளை தான் பிரதானம். மனதுக்கும் மூளைக்கும் வித்யாசமில்லை. மனதில் எண்ணங்கள் தோன்றுவதெல்லாம் மூளையின் செயல்பாடுதான்,

மனோ வியாதி இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நியூரோசிஸ் உள்ளவர்களுக்கு தங்கள் குறைபாடு தெரியும். மனச்சோர்வு, மனப்பதற்றம், ஆழ்ந்த பயம், கருத்து ஆவேசம் அல்லது என்ன சுழற்சி, அதிக உணர்ச்சி வசப்படுதல், தன் உடலைப்பற்றி அதிக கவலை என்பவை நியூரோசிஸ் பிரிவில் வருபவை.

சைகோசிஸ் தீவிரமான மன வியாதி, நோயாளிகளுக்கு தன் குறைபாடு தெரியாது. தன்னைச் சுற்றியுள்ள நிஜ வாழ்க்கை புரியாது. எண்ணச் சிதைவு ஏற்ப்படும். உச்சக் கட்ட மனநோய் வியாதியான  மனச் சிதைவு இந்த பிரிவை சேர்ந்தது. மன எழுச்சி நோயும் சைகோசிஸ் வியாதிதான். இவை தவிர குழந்தைகளுக்கு வரும் மனவியாதிகள், ஆளுமை கோளாறுகள் போன்ற மன வியாதிகள் உள்ளன. வாதத்தினாலும், பித்தத்தினாலும், கபத்தினாலும், இந்த மூன்றின் சேர்க்கையாலும் எதிர்பாராத விதமாக ஏற்ப்படும் உடல் மன நலிவுகளாலும் மனநோய் உண்டாகும்.

மூளையில் உள்ள நாளங்கள் எண்ணங்களை கொண்டு      செல்பவை. இவை கோபம், தூக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் மனோ வியாதி ஏற்படும். சரிவர உடலை பராமரிக்காதது, தவறான உணவுகளை உட்கொள்ளுதல், மனது ஒப்புக்கொள்ளாத சிந்தனைகளை அடிக்கடி யோசிப்பது, மூளையின் செயல்பாடுகளை தடுக்கும் வகையில் அதிர்ச்சியான சம்பவங்கள் நிகழ்த்துவது போன்றவை மனநோய் வர காரணங்களாக உள்ளன.

மனநோய் என்பது பிற நோய்களை போல சத்து குறைபட்டினாலோ அல்லது வயது காரணமாகவோ வருவதல்ல. மனதில் எழும் குழப்பங்கள், மூளை சிந்திக்கும் அளவை தாண்டி செயல்பட தூண்டுகிறது. இதனால் மூளையிலுள்ள செல்கள் மாற்றுப் பாதையில் செயல்படும் வாய்ப்பு உருவாகிறது. இதனால் மனிதனின் நடவடிக்கைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. பணிச்சுமை, மன உளைச்சல், தேவையில்லாத சிந்தனைகளை நாள்தோறும் யோசிப்பது போன்ற அனைத்துமே மனநோயின் அடிப்படையாக உள்ளது.
  

பக்கவாதம் என்றால் என்ன?


பக்கவாதம்


உடலில் ஆக்சிஜன் மற்றும் குளுக்கோஸ் அளவு குறையும் போது, மூளையின் உள்ள செல்கள் இறக்க நேரிடுவது : மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபடுவது ஆகியவை, பக்கவாதம் ஏற்படக் காரணங்களாக அமைகின்றன. இறப்புக்கான காரணமான நோய்களில், இது, மூன்றாவது இடத்தில் உள்ளது. 6 நொடிக்கு ஒருவர் என, ஆண்டுக்கு, 1.5 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதில், 15 முதல் 30 சதவீதம் பேர், படுத்த படுக்கையாகி விடுவர்.

இந்த நோய் பாதித்தால் உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்புச் சத்து அதிகமாகி உடல் எடை கூடுதல், குடிப்பழக்கம், மன அழுத்தம் போன்றவை இதற்கு காரணம்.