மனம், அறிவு, உணர்வு, நினைவாற்றல், விருப்பம், ஒழுக்கம், நடவடிக்கை, செயல் இவற்றின் மாறுபாட்டை மன நோய் என அறிந்துக்கொள்ள வேண்டும். மனநோய் என்றால் ஆயுர்வேதத்தில் மட்டுமே குணப்படுத்த முடியும் என பழங்காலத்தில் நம்பிக்கை இருந்தது.
பழங்காலத்தில் மன நோய்கள் உள்ளவர்களை சங்கிலியால், கட்டி கோவிலை சுற்றி வலம் வர வைப்பது, அடிப்பது இவை தன சிகிச்சை. சமூகத்தில் மன நோய்யை பற்றிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. ஆயுர்வேதத்தை பொருத்தவரை மனது தான். மனித சிந்தனைகளின் பிறப்பிடம். மனிதன் இறந்தால், மூளையும் இறந்துவிடும். நவீன மருத்துவ முறைகளை பொறுத்த வரை மூளை தான் பிரதானம். மனதுக்கும் மூளைக்கும் வித்யாசமில்லை. மனதில் எண்ணங்கள் தோன்றுவதெல்லாம் மூளையின் செயல்பாடுதான்,
மனோ வியாதி இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நியூரோசிஸ் உள்ளவர்களுக்கு தங்கள் குறைபாடு தெரியும். மனச்சோர்வு, மனப்பதற்றம், ஆழ்ந்த பயம், கருத்து ஆவேசம் அல்லது என்ன சுழற்சி, அதிக உணர்ச்சி வசப்படுதல், தன் உடலைப்பற்றி அதிக கவலை என்பவை நியூரோசிஸ் பிரிவில் வருபவை.
சைகோசிஸ் தீவிரமான மன வியாதி, நோயாளிகளுக்கு தன் குறைபாடு தெரியாது. தன்னைச் சுற்றியுள்ள நிஜ வாழ்க்கை புரியாது. எண்ணச் சிதைவு ஏற்ப்படும். உச்சக் கட்ட மனநோய் வியாதியான மனச் சிதைவு இந்த பிரிவை சேர்ந்தது. மன எழுச்சி நோயும் சைகோசிஸ் வியாதிதான். இவை தவிர குழந்தைகளுக்கு வரும் மனவியாதிகள், ஆளுமை கோளாறுகள் போன்ற மன வியாதிகள் உள்ளன. வாதத்தினாலும், பித்தத்தினாலும், கபத்தினாலும், இந்த மூன்றின் சேர்க்கையாலும் எதிர்பாராத விதமாக ஏற்ப்படும் உடல் மன நலிவுகளாலும் மனநோய் உண்டாகும்.
மூளையில் உள்ள நாளங்கள் எண்ணங்களை கொண்டு செல்பவை. இவை கோபம், தூக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் மனோ வியாதி ஏற்படும். சரிவர உடலை பராமரிக்காதது, தவறான உணவுகளை உட்கொள்ளுதல், மனது ஒப்புக்கொள்ளாத சிந்தனைகளை அடிக்கடி யோசிப்பது, மூளையின் செயல்பாடுகளை தடுக்கும் வகையில் அதிர்ச்சியான சம்பவங்கள் நிகழ்த்துவது போன்றவை மனநோய் வர காரணங்களாக உள்ளன.
மனநோய் என்பது பிற நோய்களை போல சத்து குறைபட்டினாலோ அல்லது வயது காரணமாகவோ வருவதல்ல. மனதில் எழும் குழப்பங்கள், மூளை சிந்திக்கும் அளவை தாண்டி செயல்பட தூண்டுகிறது. இதனால் மூளையிலுள்ள செல்கள் மாற்றுப் பாதையில் செயல்படும் வாய்ப்பு உருவாகிறது. இதனால் மனிதனின் நடவடிக்கைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. பணிச்சுமை, மன உளைச்சல், தேவையில்லாத சிந்தனைகளை நாள்தோறும் யோசிப்பது போன்ற அனைத்துமே மனநோயின் அடிப்படையாக உள்ளது.