உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்பவை கீரைகள். பல வகை கீரைகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டாலும்,
தண்டுக்கீரைக்கு தனி மகத்துவம் உண்டு. விதை, தண்டு, இலை என எல்லா பாகங்களும் ருசிக்கப்படும் ஒரே கீரை வகை
இதுதான். சிறப்புமிக்க தண்டுக்கீரையின் சத்துக்களை பார்க்கலாம்.....
* தண்டுக்கீரை அமரன்தாசியீயா என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் அம ரன்தஸ் ஸ்பைனஸ் ஆகும். தண்டுக்கீரையில் 70-க்கும் அதிகமான வகைகள் உலகமெங்கும் விளைகிறது.
* சமைத்த தண்டுக்கீரையில் வைட்டமின்- ஏ மற்றும் வைட்டமின்-சி சத்துக்கள் கணிசமாக நிறைந்துள்ளன.
* பி-குழும வைட்டமின்களான தயமின், நியாசின் மற்றும் ரீபோபிளேவின் போன்றவை அதீத அளவில் உள்ளன. இவை உடலுக்கு சக்தியை அளிப்பதுடன் உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்பு பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன.
* கால்சியம், இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாது உப்புகளும் இதில் உள்ளன. இவை உடலை நோய் காரணிகளிடமிருந்து காப்பதுடன், பல்வேறு சத்துக்களை வழங்கி உடல்செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
* லியூசின் மற்றும் திரியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் தண்டுக்கீரையில் காணப்படுகின்றன. இவை உடலில் புரதப் பொருளை சீரான விகிதத்தில் அதிகரிக்கச் செய்கின்றன.
* உடலின் பருமனை அதிகரிக்கச் செய்யும் காரணிகளான சர்க்கரை (1.69 கிராம்) மற்றும் கார்போஹைட்ரேட் (62.25 கிராம்) குறைவான அளவுகளிலே உள்ளன. இதனால் தண்டுக் கீரையை தினசரி உணவோடு சேர்த்துக் கொள்வதால் மாரடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
* நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் பல்வேறு 'ஆன்டி-ஆக்ஸிடெண்ட்' பொருட்கள் இதில் இருக்கின்றன. இவை ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களை வளப்படுத்துவதன் மூலம் நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கின்றன.