Pages

Showing posts with label கால்சியம். Show all posts
Showing posts with label கால்சியம். Show all posts

Saturday, May 31, 2014

நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கும் தண்டுக்கீரை

தண்டுக்கீரை
உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்பவை கீரைகள். பல வகை கீரைகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டாலும், தண்டுக்கீரைக்கு தனி மகத்துவம் உண்டு. விதை, தண்டு, இலை என எல்லா பாகங்களும் ருசிக்கப்படும் ஒரே கீரை வகை இதுதான். சிறப்புமிக்க தண்டுக்கீரையின் சத்துக்களை பார்க்கலாம்.....

* தண்டுக்கீரை அமரன்தாசியீயா என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் அம ரன்தஸ் ஸ்பைனஸ் ஆகும். தண்டுக்கீரையில் 70-க்கும் அதிகமான வகைகள் உலகமெங்கும் விளைகிறது.

* சமைத்த தண்டுக்கீரையில் வைட்டமின்- ஏ மற்றும் வைட்டமின்-சி சத்துக்கள் கணிசமாக நிறைந்துள்ளன.

* பி-குழும வைட்டமின்களான தயமின், நியாசின் மற்றும் ரீபோபிளேவின் போன்றவை அதீத அளவில் உள்ளன. இவை உடலுக்கு சக்தியை அளிப்பதுடன் உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்பு பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன.
* கால்சியம், இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாது உப்புகளும் இதில் உள்ளன. இவை உடலை நோய் காரணிகளிடமிருந்து காப்பதுடன், பல்வேறு சத்துக்களை வழங்கி உடல்செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

* லியூசின் மற்றும் திரியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் தண்டுக்கீரையில் காணப்படுகின்றன. இவை உடலில் புரதப் பொருளை சீரான விகிதத்தில் அதிகரிக்கச் செய்கின்றன.

* உடலின் பருமனை அதிகரிக்கச் செய்யும் காரணிகளான சர்க்கரை (1.69 கிராம்) மற்றும் கார்போஹைட்ரேட் (62.25 கிராம்) குறைவான அளவுகளிலே உள்ளன. இதனால் தண்டுக் கீரையை தினசரி உணவோடு சேர்த்துக் கொள்வதால் மாரடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

* நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் பல்வேறு 'ஆன்டி-ஆக்ஸிடெண்ட்' பொருட்கள் இதில் இருக்கின்றன. இவை ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களை வளப்படுத்துவதன் மூலம் நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கின்றன.

Saturday, April 26, 2014

வாழைப்பழத்தின் வகைகளும், நன்மைகளும்!

வாழைப்பழம்
வாழைப்பழம் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றது என்பது பொதுவான கருத்தாகும். அது மட்டுமின்றி, அறிவியல் ரீதியாகவும் இது சரி என்று நிரூபணமாகி இருக்கிறது.

வாழைப்பழத்தில் கார்போஹைடிரேட், விட்டமின், கால்சியம், தாது சத்துக்கள் அடங்கி இருப்பதுடன், எளிதில் ஜீரணமாகும், கொழுப்பை குறைக்கும் சக்தியும் அதிகம் உள்ளதாம். இந்த சக்தி நன்றாக வேலை செய்யும்போது, உடல் எடையும் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை உணவுடன், அல்லது இரவு உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றது. வாழைப்பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அனைத்து வகைகளும் உடலுக்கு பலனை அளிக்கக்கூடியவையே. இப்போது வாழைப்பழத்தின் வகைகளும், அவற்றின் நன்மைகளையும் பார்க்கலாம்.. 

மலை வாழைப்பழம்- மலச்சிக்கலைத் தீர்க்கும்

செவ்வாழைப் பழம்- உயிரணுக்களைப் பெருக்கும்

மஞ்சள் வாழைப்பழம்- குடல் புண்களை ஆற்றும்

பேயன் வாழைப்பழம்- அம்மை நோயால் குடலில்

ரஸ்தாலி வாழைப்பழம்- நாவுக்கு சுவை தரும்

மொந்தன் பழம்- உடலின் வறட்சியைப் போக்கும்

பச்சை வாழைப்பழம்- உடலுக்குக் குளிர்ச்சி தரும்

நேந்திரம் வாழைப்பழம்- சேரும் நஞ்சை முறிக்கும். தோலுக்கு மினுமினுப்பைத் தரும்.

Saturday, April 5, 2014

வெயிலுக்கு இதமான மோர்

மோர்
கோடைகாலம் வந்தாலே விதம் விதமாக குளிர்பான விளம்பரங்கள் கலக்கி எடுக்கும். ஆனால் உண்மையான இயற்கை குளிர்பானத்தை நாம் மறந்து விடுகிறோம். ஏழைகளின் சக்தி என்று கருதப்படுவது, நீராகாரம். முதல் நாள் வடித்த சோற்றில் தண்ணீரை ஊற்றி வைத்து அதை மறுநாள் தண்ணீருடன் சேர்த்து சாப்பிடுவது தான் நீராகாரம்.

அதில் உள்ள சத்துக்களை எந்த நவீன மருந்தும் தர முடியாது. அதே போன்ற மற்றொரு சத்தான பானம், மோர்,பாலை உறை ஊற்றி கிடப்பது தயிர். இந்த தயிரை மத்து கொண்டு கடைந்து வெண்ணெய் சத்தை பிரித்து எடுத்துவிடவேண்டும்.

கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைத்தபின் மோர் கிடைக்கும் இதனுடன், கறிவேப்பிலை,மல்லிதழை,இஞ்சி,பச்சை மிளகாய், போன்றவற்றை பொடிப்பொடியாக நறுக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.

இப்போது சுவையான மோர் தயார். மோரில் பொட்டசியம், வைட்டமின் பி12,கால்சியம்,ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரம் சத்துக்கள் நிறைந்துள்ளன. புளிப்பு,உப்பு,காரம், உவர்ப்பு என நான்கு சுவைகளையும் மோர் தரக்கூடியது. நீர் மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது.

பசியின்றி வயிறு திம்மென்று இருக்கும்போது இஞ்சி கலந்த இந்த நீர்மோர் ஒரு டம்ளர் பருக அரைமணி நேரத்தில் நல்ல பசி எடுப்பதை உணர முடியும். கொளுத்தும் வெயிலில் சுற்றிவந்த பின் உடலில் உள்ள நீர்சத்து முழுமையும் ஆவியாகி விடும்.

அப்போது ஒரு டம்ளர் மோர் (முடிந்தால் மண்பானை தண்ணீர் சேர்த்து) குடித்துப்பாருங்கள். உடலில் புத்துணர்ச்சி ஏற்படுவதை நன்றாக உணர முடியும். இது எந்த குளிர்பானத்திலும் கிடைக்காத ஒன்று, வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து ப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம்.

உடல் சூட்ட தணிக்கும். கோடைகாலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்து விடும். அதற்கு தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும் வரை மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும். குளிர்பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை சமாச்சாரங்கள் எதுவும் இன்றி கிடைக்கும் மோர் அருந்தி இயற்கையோடு இசைந்து வாழ்வோம்.