Pages

Showing posts with label பால் தரும் பட்டு போன்ற சருமம். Show all posts
Showing posts with label பால் தரும் பட்டு போன்ற சருமம். Show all posts

Monday, February 8, 2016

பால் தரும் பட்டு போன்ற சருமம்


 பால் தரும் பட்டு போன்ற சருமம்
பாலில் புரோட்டீன், கால்சியம், லாக்டோஸ், கொழுப்பு, வைட்டமின் ஏ, பி12, டி மற்றும் ஜிங்க் இருக்கிறது. இத்தகைய சத்துக்கள் இருப்பதால், அவற்றை சருமத்திற்கு பயன்படுத்தும் போது சருமம் மென்மையாகவும், ஈரப்பதமுள்ளதாகவும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இவை சரும வறட்சி, சிவப்பு நிறம், அரிப்பு போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கிறது. ஆகவே பட்டுப்போன்ற சருமம் வேண்டுமென்பவர்கள், பாலை சருமத்திற்கு பயன்படுத்தி, சருமத்தை அழகாக்குங்கள்.

* 2 டேபிள் ஸ்பூன் பால், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்களும் வெளியேறிவிடும்.

* பாதாமை பாலுடன் சேர்த்து அரைத்து, சிறிது ஆலிவ் ஆயிலை விட்டு, பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் ஆரஞ்சு தோலை அரைத்து, அதனுடன் கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பிறகு ஐஸ் கட்டிகளால் 3 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள தூசிகள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

* கொதிக்க வைத்துள்ள பாலை ஓரளவு ஆற வைத்து, காட்டனால் முகத்திற்கு 5 நிமிடம் தேய்க்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மட்டும் போவதோடு, சருமம் நன்கு அழகாகக் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால், சருமம் நன்கு பளிச்சென்று சுத்தமாக காணப்படும்.

* சரும வறட்சியை நீக்குவதற்கு, வாழைப்பழத்தை நன்கு மசித்து, பால் மற்றும் தேனுடன் கலந்து, முகத்திற்கு தடவி காய வைக்க வேண்டும். காய்ந்ததும், சிறிது பாலை தொட்டு, அதன் மேல் தேய்த்து மசாஜ் செய்து, பிறகு கழுவ வேண்டும்.

- பாலை வைத்து ஒரு சில ஃபேஷியல் மற்றும் மாஸ்குகளை செய்து, முகத்தை அழகோடும், பொலிவோடும் வைத்துக் கொள்ளுங்கள்.