நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில்
போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும்.
இப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, பி2, சி போன்ற உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளன. சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன.
இன்று நாம் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் இரத்த அழுத்தம், உடல் பருமன், உடல் சோர்வு போன்றவை உருவாகின்றது. இந்த கொழுப்புப் பொருள் பெரும்பாலும் எண்ணெயின் மூலம் அதிகம் உடலில் சேர்கின்றது.
ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புச் சத்து நீங்கும். கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, திப்பிலி, காயம், இந்துப்பு சம அளவு எடுத்து பொடி செய்து, சுடுசாதத்தில் கலந்து நெய் விட்டு பிசைந்து சாப்பிட பசியின்மை,
உணவில் வெறுப்பு, புளியேப்பம், வாய் குமட்டல் ஆகியவை குணமாகும். குழந்தைகளுக்கும் இந்த சாதத்தை சிறிய அளவில் கொடுத்து வரலாம். கறிவேப்பிலை ஈர்க்குடன் சேர்த்து இடித்து சாறு பிழிந்து கிராம்பு, திப்பிலி பொடியை சேர்த்து குழைத்து தர குழந்தைகளுக்கு உண்டாகும் வாந்தி நிற்கும். நன்கு பசியெடுக்கும்.
கறிவேப்பிலை, மிளகு, சீரகம், வெந்தயம், சுண்டை வற்றல், சூரணத்து உப்பு சேர்த்து உணவில் கலந்து சாப்பிட்டு வர மந்தம் நீங்கி பசி உண்டாகும். கறிவேப்பிலையை துவையலாகவோ, பொடியாகவோ செய்து தினமும் உட்கொண்டு வர, செரியாமை, பசியின்மை, கழிச்சல் இவற்றைப் போக்கும்.