Pages

Showing posts with label அரிப்பு. Show all posts
Showing posts with label அரிப்பு. Show all posts

Saturday, September 6, 2014

பழைய சாதம் ... புதிய தகவல்!


நம் முன்னோர்கள் சத்துமிக்க உணவு சாப்பிட்டதால் தான், வயதானாலும் சிறிதும் சக்தி குறையாமல் இருந்தனர். அப்படி அவர்கள் உட்கொண்ட உணவுகளில் ஒன்று தான் பழைய சாதம்.

பழைய சாதம் சாப்பிடுவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் சுறுசுறுப்பு, பன்றிக்காய்ச்சல், உள்ளிட்ட எந்த காய்ச்சலும் அணுகாது. உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல் புண், வயிற்றுவலி குணமடையவும், சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவையும் சரியாகும். சட்டென்று ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரவும், உடல் எடை குறையவும் பழைய சாதம் பயன்படுகிறது. முதல் நாள் சாதத்தில் நீருற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்க மருத்துவர் ஒருவர்.

சிறு குடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது. காலை உணவாக பழைய சாதத்தை பயன்படுத்துவதால் உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகின்றன. மறு நாள் இதை குடிக்கும் போது உடல் சூடு தணிவதோடு குடல் புண், வயிற்றுவலி போன்றவற்றை குணப்படுத்தும். இதிலிருந்து நார்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. இந்த பழைய சாதம், உணவு முறையை சில நாள் தொடந்து சாப்பிட்டால், நல்ல வித்தியாசம் தெரியும்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னெவன்றால் உடலுக்கு அதிகமான சக்த்தியை தந்து, நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதை கொடுத்து வந்தால், ஆச்சரியப்படும் அளவிற்கு பலன் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில் கூட வராது. சைனஸ் நோய் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

Thursday, July 3, 2014

உடல் நோயை தீர்க்கும் பாகற்காய்

பாகற்காயின் இலையும் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. பாகற்காய் இலையில் இருந்து எடுக்கப்படும் சாறு, பல நோய்களுக்கு  அருமருந்தாகும். இந்த இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்து போட்டால் படை, சிரங்கு, அரிப்பு போன்றவை பறந்தோடி விடும்.
 
பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து  விடும். பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக்  கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற
அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண்  நோய் குணமாகும். இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப்  பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.

பாகல் இலைச்சாற்றில் சிறிது அளவு குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த ஆகாரப்பை சிறுத்து வந்து விடும். பாகல் இலைச்  சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும். பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ்  எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். ஓர்  அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால்  காசநோயை மட்டுப்படுத்தும். பாக்டீரியா, டயபெடீஸ், ரத்தப் புற்றுநோய், குடல்புண், ரத்த அழுத்தம், மலச்சிக்கல் என்று பல உபாதைகளுக்கும்  பயனளிக்கக் கூடியது.

சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.