Pages

Friday, December 18, 2015

பெண்கள் பேஸ்புக்கில் தவறாக சித்திரிக்கப்படுவதை தடுக்கும் வழிமுறை


இணையத்தில் சாதாரண பெண்களின் புகைப்படங்களை எடுத்து மோசமான பக்கங்களில் பகிரும் அவலம் மிக சர்வ சாதரணமாக நடக்கிறது. பெண்கள் இதற்காக மனம் குமுறி இணையத்தை விட்டு விலகவும் நேரிடுகறது.



ஆனால் எந்த தனிநபரின் புகைப்படத்தையும் அவர்கள் அனுமதியில்லாமல் பகிருவது, அதுவும் மோசமான பக்கங்களில் பகிருவது அதிலும் பாலியியல் சமபந்தபட்டு மோசமாக பின்னூட்டம் இடுவது சட்டப்படி குற்றம் ஆகும். 


எனவே புகைப்படம் பகிரப்பட்ட பெண்கள் அந்த பக்கங்களில் இருந்து புகைப்படத்தை எடுக்க வைக்கலாம்.

முக்கியமாக பேஸ்புக்கில் அந்த பக்கத்தை உடனே பெண்கள் ப்ளாக் செய்கிறார்கள். ஆனால் ரிப்போர்ட் செய்துவிட்டே ப்ளாக் செய்யவேண்டும். ரிப்போர்ட் செய்யும் முன் அவர்கள் புகைப்படத்துடன் இருக்கும் அந்த பக்கத்தை சேர்த்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்து கொள்வதால் பிறகு தேவை என்றால் கம்ப்ளயின்ட் செய்ய வசதியாக இருக்கும்.

ஸ்க்ரீன் ஷாட்:

1. புகைப்படதுடன் அந்த பக்கத்தின் பெயரும் ஸ்க்ரீனில் தெரியும்படி வைக்கவேண்டும்.

2. வேறு Tab கள் இருந்தால் அனைத்தையும் மூடிவிட்டு இந்த பக்கம் மட்டும் தெரியும்படி வைக்கவேண்டும்.

3. விண்டோஸ் கீ போர்ட் ல் வலது பக்கத்தில் prt sc என்று எழுதப்பட்ட பட்டன் இருக்கும். அதை பிரஸ் செய்தால் ஸ்க்ரீன் காப்பியாகும்.(copy)

4.MS Paint சென்று paste செய்தால் இந்த ஸ்க்ரீன் அப்படியே சேவ் ஆகிவிடும். பிறகு அதை Folder ல் சேவ் செய்து கொள்ளலாம்.

இவை நமக்கு வழக்கு செய்ய ஒரு சாட்சியாக இருக்கும். எனவே முதலில் சாட்சியாக ஆதாரங்களை எடுத்து வைத்து கொண்டு ரிப்போர்ட் செய்தல் மிக நலம்.

Wednesday, December 2, 2015

இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெண்களை பாதுகாக்க சட்டம்

இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெண்களை பாதுகாக்க சட்டம்

உங்கள் ஃபேஸ்புக் இன்பாக்ஸில் ஆபாசமாக மெசேஜ் அல்லது படங்கள் அனுப்பினாலோ, ஈமெயிலில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினாலோ, ஃபோனில் ஆபாசமாக பேசினாலோ, வழக்கறிஞரை சந்தித்து 66A செக்ஷன் மூலம், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம். ஃபேக் ஐடியாக இருந்தாலும் காவல் துறையினர் ஆளை கண்டுப் பிடித்து விடுவர். 

மெசேஜ்களை டெலிட் செய்யாமல் வைத்திருங்கள். அதுவே ஆதாரமாகும். உங்களைப் பற்றி தரக்குறைவாக ஃபேஸ்புக் வாலிலோ, ப்ளாகிலோ போட்டிருந்தால் 509 செக்ஷன் மூலம் நடவடிக்கை எடுக்கலாம். ஒரு வருட சிறைத் தண்டணை. அந்த போஸ்ட்டை ஸ்க்ரீன்ஷாட் செய்து விடுங்கள். அதுவே ஆதாரமாகும். 


உங்கள் ஃபோட்டோக்களை இன்னொருவர் ஷேர் செய்து தரக்குறைவாக விமர்சித்து இருந்தாலோ, ஆபாச சைட்களில் உங்கள் ஃபோட்டோக்களை போட்டிருந்தாலோ, செக்ஷன் 499 படி ஒரு வருட சிறைத் தன்டணை கிடைக்க செய்யலாம். உங்கள் ஃபோட்டோ இருக்கும்னிடத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுங்கள். 



இந்தியாவில் எங்கு இருந்தாலும் இந்த சட்டம் செல்லுபடியாகும். வெளிநாட்டில் இருந்து இந்தியர்கள் குற்றம் புரிந்தால் IPC 188 படி மேற்சொன்ன சட்டப்பிரிவுகளில் உள்ளூரிலேயே வழக்கு பதிவு செய்யலாம். மேற்சொன்ன தகவல்களை வைத்து உங்களை இழிவுபடுத்தியவனை தொடர்பு கொண்டும் பனியவைக்கலாம் தைரியமாக புகார் கொடுங்கள். உங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள்.

பெண்களுக்கு பிடிக்காத குணத்தை கொண்ட ஆண்கள்

பெண்களுக்கு பிடிக்காத குணத்தை கொண்ட ஆண்கள்

ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காது. உதாரணமாக, ஆண்களுக்கு திமிர் அதிகம் உள்ள பெண்களைப் பார்த்தால், பிடிக்காது. அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. 


அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும். ஆண்கள் எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் பெண்கள் அடியோடு வெறுப்பார்கள்.  



பல பெண்களுடன் அந்தமாதிரியான தொடர்பில் இருக்கும் குணமுள்ள ஆண்களுடன் நட்பு கொள்வதையும் பெண்கள் வெறுப்பார்கள். ஏனெனில் இந்த குணமுள்ள ஆண்கள் வெறும் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான் பழகுகிறார்கள் என்பது பெண்களின் கருத்து. பெண்களுக்கு குடிக்கும் ஆண்களை கண்டால் பிடிக்காது. அதற்காக சுத்தமாக பிடிக்காது என்று சொல்ல முடியாது. 



ஆனால் தினமும் குடித்தால், அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்பதால் தான். சைகோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும். சந்தேக குணம் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. அது உறவுமுறையை அழிப்பதோடு, வெறுப்பை சம்பாதிக்கும். எனவே இந்த குணமுள்ள ஆண்களையும் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது

இன்றைய சூழலில் பெண்கள் தற்காப்புக்கலை கற்பது அவசியம்

இன்றைய சூழலில் பெண்கள் தற்காப்புக்கலை கற்பது அவசியம்


சமுதாயத்தில் பாதுகாப்பு குறைந்து வருவதால், இன்றைய சூழலில் பெண்கள் தற்காப்புக்கலை கற்பது அவசியம். இன்றைய காலக்கட்டத்தில் சமுதாயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது குறைந்து வருகிறது. இதனால் பெண்கள் எப்போதும் பாதுகாப்பு உணர்வுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியம். 


பள்ளி, கல்லூரிக்கு செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள். சமூக விரோதிகளால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டாலோ, கேலி, கிண்டல் செய்தாலோ பெண்கள் கண்டும் காணாமல் தலை குனிந்தவாறு செல்வார்கள். பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்தப்பட்டால் எதிரிகளை சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. 



இதற்கு ஒரு சில உத்திகளை கையாண்டாலே போதுமானது. எதிரிகளை எளிதில் வீழ்த்தி விட முடியும். சிறந்த பயிற்சி மூலமாக அந்த உத்திகளை அறிந்து கொள்ள முடியும். எதிரிகளால் தாக்குதலுக்கு உட்படும்போது பெண்கள் விடாமுயற்சியுடன், எதிர்த்து போராட வேண்டும். மனித உடலில் மென்மையான பகுதிகள் மற்றும் தாக்குதல் ஏற்பட்டு நிலைக்குலைந்து போகும் பாகங்கள் உள்ளன. 



எதிரிகளிடம் போராடும்போது, அந்த இடங்களில்தான் தாக்குதல் நடத்த வேண்டும். பயந்து அடிப்பணிந்து விடக்கூடாது. எதிர் தாக்குதல் நடத்தினால்தான், எதிரிகளுக்கும் பயம் ஏற்படும். இந்தியாவில் மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருகின்றன. தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது. 



இருந்தாலும் சட்டம் மற்றும் ஒழுங்கு நன்றாக இருப்பதால், தொடர் சம்பவங்கள், கொடூர சம்பவங்கள் நடைபெறுவது இல்லை. இருந்தபோதிலும் தற்காப்புக்கலை கற்றுக்கொள்வது மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.