Pages

Friday, December 18, 2015

பெண்கள் பேஸ்புக்கில் தவறாக சித்திரிக்கப்படுவதை தடுக்கும் வழிமுறை


இணையத்தில் சாதாரண பெண்களின் புகைப்படங்களை எடுத்து மோசமான பக்கங்களில் பகிரும் அவலம் மிக சர்வ சாதரணமாக நடக்கிறது. பெண்கள் இதற்காக மனம் குமுறி இணையத்தை விட்டு விலகவும் நேரிடுகறது.



ஆனால் எந்த தனிநபரின் புகைப்படத்தையும் அவர்கள் அனுமதியில்லாமல் பகிருவது, அதுவும் மோசமான பக்கங்களில் பகிருவது அதிலும் பாலியியல் சமபந்தபட்டு மோசமாக பின்னூட்டம் இடுவது சட்டப்படி குற்றம் ஆகும். 


எனவே புகைப்படம் பகிரப்பட்ட பெண்கள் அந்த பக்கங்களில் இருந்து புகைப்படத்தை எடுக்க வைக்கலாம்.

முக்கியமாக பேஸ்புக்கில் அந்த பக்கத்தை உடனே பெண்கள் ப்ளாக் செய்கிறார்கள். ஆனால் ரிப்போர்ட் செய்துவிட்டே ப்ளாக் செய்யவேண்டும். ரிப்போர்ட் செய்யும் முன் அவர்கள் புகைப்படத்துடன் இருக்கும் அந்த பக்கத்தை சேர்த்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்து கொள்வதால் பிறகு தேவை என்றால் கம்ப்ளயின்ட் செய்ய வசதியாக இருக்கும்.

ஸ்க்ரீன் ஷாட்:

1. புகைப்படதுடன் அந்த பக்கத்தின் பெயரும் ஸ்க்ரீனில் தெரியும்படி வைக்கவேண்டும்.

2. வேறு Tab கள் இருந்தால் அனைத்தையும் மூடிவிட்டு இந்த பக்கம் மட்டும் தெரியும்படி வைக்கவேண்டும்.

3. விண்டோஸ் கீ போர்ட் ல் வலது பக்கத்தில் prt sc என்று எழுதப்பட்ட பட்டன் இருக்கும். அதை பிரஸ் செய்தால் ஸ்க்ரீன் காப்பியாகும்.(copy)

4.MS Paint சென்று paste செய்தால் இந்த ஸ்க்ரீன் அப்படியே சேவ் ஆகிவிடும். பிறகு அதை Folder ல் சேவ் செய்து கொள்ளலாம்.

இவை நமக்கு வழக்கு செய்ய ஒரு சாட்சியாக இருக்கும். எனவே முதலில் சாட்சியாக ஆதாரங்களை எடுத்து வைத்து கொண்டு ரிப்போர்ட் செய்தல் மிக நலம்.

No comments: