Pages

Friday, May 8, 2015

தனியாக உடற்பயிற்சி செய்வது அலுப்பை உண்டாக்கும்

தனியாக உடற்பயிற்சி செய்வது அலுப்பை உண்டாக்கும்• தனியாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது அலுப்பாக இருப்பின், குடும்ப உறுப்பினரையோ அல்லது தோழியையோ துணையாக சேர்த்துக் கொள்ளுங்கள். ஜிம்மிற்கு செல்லும் போது உங்கள் உடற்பயிற்சி இலக்குகளை நன்றாக கவனித்து, உற்சாகமூட்டி ஆலோசனை அளிக்கக்கூடியவரை துணைக்கு வைத்துக் கொண்டால் இன்னும் நல்லது.

• எந்த ஒரு உடற்பயிற்சியையும் துவங்கு முன்னர், உடலின் இறுக்கத்தை தளர்த்தி, தசைகளை நெகிழ்வூட்டும் ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகளை மேற்கொள்வது மிக அவசியம். இவை திசுக்களில் ஏற்படும் சேதங்களை தவிர்க்க உதவுகின்றன. பொதுவாக உடற்பயிற்சி செய்முறைகளை மிதமான வேகத்தில் துவங்கி, பின்னர் படிப்படியாக அதிகரித்துக் கொள்வது சிறந்தது.

• எடையைக் குறைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினால், அது எடையைக் கூட்டுவதில் தான் போய் முடியும். மாறாக, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவுமுறை ஆகியவற்றின் மூலம் உடற்கட்டை ஒரே சீராக வைத்திருப்பதை இலக்காக கொள்ள வேண்டும்.

• எனர்ஜி பார் போன்ற நவீன சத்து தின்பண்டங்களை உடற்பயிற்சிக்கு முன்னதாக சாப்பிடலாம். இவற்றில் நார்ச்சத்து மற்றும் உடலுக்கு தேவையான சர்க்கரை போன்றவை நிறைந்துள்ளன. மிகவும் பசியாக உணர்ந்தால் வாழைப்பழம் சாப்பிடலாம். இது உடனடியாக செரிமானமாகி சக்தியை தரக்கூடியது.

• இதயத்துடிப்பு மிகவும் குறைவாக இருந்தால், உடலுக்கு தேவையான அளவு உடற்பயிற்சி இல்லை என்று அர்த்தம். அதே சமயம் மிக அதிகமான அளவில் இருந்தால், அது உடற்பயிற்சி மிதமிஞ்சி இருப்பதை குறிப்பிடுகிறது. எனவே ஒரு இதயத்துடிப்பு கருவி மூலமோ அல்லது நாடி பார்த்தோ, இதயத்துடிப்பின் அளவை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

• சிரிக்கும் போதோ, புன்னகைக்கும் போதோ, உடலில் நல்ல ஹார்மோன்கள் சுரந்து கார்டிசால் போன்ற கெட்ட ஹார்மோன்களை அழிக்கின்றன. எனவே சிரித்து மகிழ வைக்கும் பொழுதுபோக்குகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். வாய்விட்டு சிரிப்பது முகத் தசைகளுக்கும் நல்ல பயிற்சியை அளித்து முகத்தை அழகாக்குகிறது. வாய்விட்டு சிரித்த பின் கண்ணாடியை பார்த்தால், உங்களுக்கே உண்மை புரியும்.

• மனம் தளராமல் ஒரே சீராக பொறுமையுடன் ஆரோக்கிய உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். 

No comments: