Pages

Tuesday, December 24, 2013

மதிப்பு கூட்டு வரியை தெரிஞ்சுக்கங்க!

மதிப்பு கூட்டு வரி என்றால் என்ன?


என்ற கேள்வி பலருக்கு உள்ளது. இவ்வரியால் மக்களுக்கும், வணிகர்களுக்கும், மாநில அரசுக்கும் என்ன பயன் என்ற கேள்வி உள்ளது.

இப்போது உள்ள வரி விதிப்பு முறையில் ஒரு பொருளை உற்பத்தி செய்ய கச்சா பொருள் வாங்கும் போது அப்பொருளுக்கு விற்பனை வரி செலுத்த வேண்டும். பின்னர் பொருளாக தயாரித்து விற்கும் போதும் வரி செலுத்த வேண்டும். இந்த வரி விதிப்பு முறையால் விலை உயர்கிறது. ஆனால் மதிப்பு கூட்டு வரி விதிப்பில் கொள் முதலுக்கு செலுத்தப் பட்ட விற்பனை வரியை வணிகர்கள் செலுத்த வேண்டிய விற்பனை வரியிலிருந்து கழித்து கொண்டு மீதி வரியை கட்டினால் போதும்.

மதிப்பு கூட்டு வரி செலுத்தியவர்களுக்கு மத்திய அரசால் விதிக்கப் படும் மொத்த விற்பனை வரி, மிகுவரி, மற்றும் கூடுதல் மிகு வரி போன்றவை மத்திய விற்பனை வரி காலத்தில் இருந்து நீக்கப்படும். இதனால் விற்பனை வரி சீராக்கப்படும். இன்றைய வரி விதிப்பு முறை மாற்றப்பட்டு வணிகர்களே தாங்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என அரசுக்கு தெரிவிக்கலாம்.

வரி விதிப்பு முறை சிக்கல் இல்லாமல் வெளிப்படையாக அமையும். இதனால் விற்பனை வரி வசூல் உயரும். வரி ஏய்ப்பு குறையும். மதிப்பு கூட்டு வரி விதிப்பால் சாதாரண மக்கள் வணிகர்கள் மற்றும் மாநில அரசுகள் பயன் பெறுவார்கள். இதனால் திறமையான சமமான வியாபார போட்டி ஏற்படும். ஐரோப்பிய நாடுகளில் 1970ம் ஆண்டுகளிலேயே மதிப்பு கூட்டு வரி அமல் படுத்தப்பட்டு விட்டது. தற்போது 130 நாடுகளில் மதிப்பு கூட்டு வரி விதிப்பு முறை உள்ளது. இந்தியாவில் 2005ம் ஆண்டு முதல் மதிப்பு கூட்டு வரி அமலில் உள்ளது.

No comments: