Pages

Monday, October 17, 2016

ஆஸ்துமாவை கட்டுக்குள் வைப்பது சாத்தியமா?

ஆஸ்துமாவை கட்டுக்குள் வைப்பது சாத்தியமா? 

 ண்டிப்பாக சாத்தியமே. ஆஸ்துமா நோயாளிகள் பயன்படுத்தக் கூடிய இடங்கள் அருகே தூசு, குப்பை தொட்டி, அழுகிப் போன உணவுகள் போன்றவை இருக்கக் கூடாது. வீட்டில், தூசு, ஒட்டடை சேராமல் பார்த்து கொள்ள வேண்டும். பயன்படுத்திய ஆடைகளை சலவை செய்யாமல், மீண்டும் பயன்படுத்த கூடாது. படுக்கைகள், தலையணைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமில்லாத பொருட்களில், கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் உருவாகும். அவை ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆகாது.

குளிரூட்டப்பட்ட அறைகளை தவிர்ப்பது நல்லது. மின்விசிறிக்கு நேரே படுக்கக் கூடாது. மேலும் வாசனை திரவியங்கள், ஊதுபத்திகள், கொசுவிரட்டிகளின் புகை போன்றவற்றின் அருகே கூட, ஆஸ்துமா நோயாளிகள் செல்லக்கூடாது. இவை யாவும், ஆஸ்துமா நோயாளிகளுக்கு எதிரி. செல்லப்பிராணிகள் வளர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்

 எனக்கு கணைய பாதிப்புள்ளது என, மருத்துவர் கூறுகிறார். கணையம் என்பது என்ன? கணையம் பாதிக்கப்பட்டால், நீரிழிவு நோய் வருமா?

உடலில் ஒரேநேரத்தில், செரிமான நீரை சுரக்கின்ற நாளமுள்ள சுரப்பியாகவும், ஹார்மோன்களை சுரக்கின்ற நாளமில்லா சுரப்பியாகவும் செயல்படும் ஒரே உறுப்பு கணையம்.

பொதுவாக, உணவு உள்ளே செல்லும்போது, உடலுக்கு தேவையான இன்சுலினை, கணையம் சுரந்து கொண்டே இருக்கும். அந்த நேரத்தில், கணையம் பாதிக்கப்பட்டு, அதில் இன்சுலின் சிறிதுகூட சுரக்காவிட்டாலோ, இன்சுலின் குறைவாக சுரந்தாலோ, சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ சர்க்கரை நோய் வரும். கணையத்தை காக்க, மது, புகை பழக்கத்தை கைவிட வேண்டும்.   

அஜீரண கோளாறு என்றால் என்ன? அதற்கான காரணம் என்ன? 

பொதுவாக எளிதில் செரிக்காத உணவுகளாகிய, இறைச்சி, மீன், கீரை வகைகளால், அஜீரணம் ஏற்பட வாய்ப்புண்டு. அதேநேரம், மாவுப் பொருட்களால் செய்யப்பட்ட உணவு பொருட்களை, அளவுக்கு அதிகமாக உண்பதாலும், அஜீரணம் வரும். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள், முதியவர்கள் என, யாருக்கு வேண்டுமானாலும் அஜீரணம் வரலாம். இது பொதுவான பிரச்னையே. வயது காரணமாக வரும் பிரச்னை அல்ல. மேலும் குடல் புண், பித்தப்பை கற்கள், உணவு குழாய் தசைகளில் ஏற்படும் பிரச்னைகள், கணைய பாதிப்பு, பெருங்குடல் புற்று நோய் போன்ற காரணங்களால், அஜீரண கோளாறுகள் ஏற்படுகின்றன.

KITCHEN TIPS - கிட்சன் டிப்ஸ்

Sunday, October 16, 2016

பெரிய நெல்லிக்காய் ஊறுகாய் - How to prepare Nellikaai Oorugai

சிறிய நீர் நெல்லிக்காய் ஊறுகாய் - How to Prepare Nellikaai Oorugai

இத செஞ்சு பாருங்க "பளிச்சுன்னு" இருப்பீங்க!

  வெயில் காலங்களில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். இந்த கருப்பு முகத்தை களையாக மாற்ற வீட்டிலேயே இருக்கு கண்கண்ட அழகு சாதன பொருட்கள். அவற்றை உபயோகித்துப் பாருங்களேன் கருப்பு மறைந்து முகம் களையாக மாறும். 

     அழகு தரும் தேங்காய் அன்றாட சமையலில் முக்கிய இடம்பெறுவது தேங்காய், இதில் உள்ள எண்ணெய் சத்து நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும். 

     இளநீரில் உள்ள வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூட அவை காணாமல் போய்விடும். பாசிப்பருப்பு ப்ளீச் முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு தீவுகள் போல் "திட்டுகள்" தோன்றும். 

     இதற்கு பாசிப்பருப்பு சிறந்த ப்ளீச் போல செயல்படுகிறது. பாசிப் பருப்பு, கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை நன்றாக காயவைத்து பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை சிறிது எடுத்து, தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து, முகத்தில் பூசுங்கள். 15 நிமிடத்துக்கு பிறகு கழுவினால் முகத்தின் கருந்திட்டுக்கள் காணமல் போகும். பழக்கூழ் பேஷியல் ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, கலக்கி பஞ்சில் முக்கி முகத்தில் பூசவேண்டும். இதனால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும். கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்,1 உலர்ந்த திராட்சை பழம் இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்து இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளவும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், இந்த பேஷியல் மாற்றி விடும். 

     பிசுபிசுப்பு நீங்க முகத்தில் அதிக எண்ணெய் பசை இருந்தாலே முகம் கருமை அடையும். தலையில் பிசுபிசுப்பை நீக்க ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும். ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும். அப்புறம் பாருங்கள் முகம் ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல பளிச் தான்.

Thursday, October 13, 2016

கண் நோய்களுக்கு உணவும் காரணம்

உடலில் உள்ள நோய் ஏற்ப்பட்டால் அது எப்படி கண்ணைப் பாதிக்கிறதோ அவ்வாறே கண்ணில் ஒரு நோய் தொற்றினால் அது உடலையும் பாதிக்கிறது. கண்ணில் ஏற்படும் எரிச்சல் போன்றவை சாதாரணமாக ஏற்படுவதில்லை. உடலில் ஸ்டார்ச், ப்ரோட்டீன், சர்க்கரை ஆகியவைகளின் அளவு கூடும் பொழுது கண் எரிச்சல் போன்ற நோய் ஏற்படுகிறது. மேலும் அதிகரிக்கும் பொழுது கண்ணில் நீர் வழிதல், புரை வளர்தல், போன்றவை ஏற்படும். அதன் முற்றிய நிலையில் கண் குருடாகி விடும்.

சரியான அளவில், சத்தான உணவு அமையாவிடில் கண் சம்பந்தமான கோளாறுகளும் ஏற்படுகின்றன. கண்ணின் அமைப்பையும் வேலை முறையையும் பாதிக்கும். சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்படாத உணவு, ரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, ரத்த நாளங்களையும் பாதிக்கிறது. எனவே உணவு சரியான விகிதத்தில் அமையாவிடின் அது வயிற்றை மட்டும் தான் பாதிக்கும். வயிற்றுக் கோளாறுகள் மட்டுமே ஏற்படும் என்பது தவறு. உணவு முறை சரியில்லாவிடில் உடல் முழுவதையும் பாதிக்கும். உடல் பாதிக்கப்படும் பொழுது உடலில் ஓர் உறுப்பான கண் பார்வையும் பாதிக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ரத்த நாளங்களும், தசைகளும் பழுதடைந்தால் ரத்த ஓட்டம் சரியாக நடை பெறாது. மென்மையாக இருக்க வேண்டிய தசைகள் இறுகி கடினத்தன்மையை பாதித்து விடும். கண்ணின் உருவத்தில் மாறுதல் ஏற்பட்டால் அது பார்வைக் குறையை ஏற்படுத்தி விடும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவை உணவு முறையில் ஏற்பட்ட முரண்பாடுகளால்தான் ஏற்படுகிறது. முதுமைப் பருவத்தில் ஏற்படும் பார்வைக் குறைபாடும் இதே காரணத்தால் தான் ஏற்படுகிறது. மனிதர்கள் முதுமை காலத்தில் வயது முதிர்வதால் இயற்கையிலேயே உருவத்தில் மாறுதல் அடைகின்றன. அதனால் தான் தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவை ஏற்படுகிறது. என்ற கருத்து மக்களிடத்தில் உள்ளது.

சுமார் 40 வயதிற்குப்பின் உடலில் முதிர்ச்சி ஏற்பட்டு தோல் சுருக்கம் ஏற்படுகிறது. கண்ணிலேயும் சுருக்கம் ஏற்படவே செய்யும். அருகிலுள்ள பொருள்களைக் கூட சரியாக பார்க்க முடியாது. எனவே கண்ணாடி தவிர வேறு வழியில்லை என்று மக்கள் முடிவெடுத்து விடுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக நாம் நமது உணவு முறையை ஒழுங்குபடுத்திக்கொள்ள தவறிவிட்டோம். இதனாலேயே பார்வை குறைவு ஏற்பட்டது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம் நஞ்சாகிப்போன உணவு, ஸ்டார்ச், குளுகோஸ் ஆகியவைகள் அதிகரித்த உணவால் தான், இன்று 40 வயதைக் கடந்தவர்களுக்கு தூரப்பார்வை குறைபாடு ஏற்படக் காரணம். இவர்கள் தங்கள் உணவு முறையை சரி செய்து கொண்டு எளிமையான சில பயிற்சிகளை மேற்கொண்டால், பார்வைக் குறைவை சரிப்படுத்திக் கொள்ள முடியும்.