Pages

Wednesday, June 22, 2016

இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் வெந்தயம்!


வெந்தயம்

வெந்தயத்தை, அஞ்சறைப் பெட்டியின் அதிசயம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு நமது கைக்கெட்டிய தூரத்தில், எப்போதும் உதவ காத்திருக்கிற அற்புத மருந்து வெந்தயம். வெந்தயம் நீரிழிவுக்காரர்களுக்கு மிக நல்லது என்பது தெரியும். ஏன் நல்லது எனத் தெரியுமா? சாதாரணமாக நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, 80 - 110 வரை இருக்கலாம். நாம் எடுத்துக் கொள்கிற உணவு, அதன் கலோரி போன்றவற்றைப் பொறுத்து, இந்த சர்க்கரையின் அளவு வேறுபடும். அதிக கலோரியுள்ள உணவு உட்கொள்கிற போது, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதுதான் இன்சுலினின் வேலை. நீரிழிவுக்காரர்களுக்கு இந்த இன்சுலின் சுரப்பு சரியாக இருக்காது.

அந்த இன்சுலின் சுரப்பை ஊக்கப்படுத்தி, கிரியா ஊக்கியாக செயல்படுகிற, வேலையைத் தான் வெந்தயம் செய்கிறது. தினமும் இரவில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த தண்ணீரோடு, வெந்தயத்தையும் சேர்த்து சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதிலும், வெந்தயத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு. அதே போல புற்றுநோய் பாதிப்பையும் குறைக்கும். வெந்தயத்தில் உள்ள பிசின், குடலுக்குள் போய், தண்ணீரை எடுத்துக் கொண்டு, ஒரு ஸ்பான்ஜ் போல விரிவடையும்.

அது உணவுக்குழாயில் உள்ள நச்சுப்பொருள்களை எல்லாம் வெளியேற்றிவிடும். எனவே, குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. வெந்தயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம். அது அசிடிட்டி எனப்படும் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும். உணவின் மூலம் உடலுக்குள் சேரும், அமில,- காரத் தன்மைகளை பேலன்ஸ் செய்து, சரியான அளவில் வைக்கக்கூடியது வெந்தயம். வெந்தயம் கலந்த மோர் குடித்தால், அமிலத் தன்மை சரியாகி, செரிமானம் சீராகும்.

வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி இருந்தால், 10 கிராம் வெந்தயத்தை, மோரில் கலந்து சாப்பிட்டால், உடனே குணம் தெரியும். வெந்தயம் வயிற்றுக்குள் போய் ஊறி, கெட்ட கிருமிகளை உறிஞ்சி, இன்பெக்ஷனை சரியாக்கும். உடல் சூட்டினால் உண்டாகும் வலியையும் விரட்டும். வயிற்றில் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் இருந்தாலும், வெந்தயம் வெளியேற்றி விடும். அமீபியாசிஸ் போன்ற நோய்களுக்கு வெந்தயம் பிரமாதமான மருந்து. தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வந்தால், பித்தம் குறையும். சிறுநீரகங்கள் சீராக இயங்கும்.

வாயுத் தொந்தரவு நீங்கும். எலும்புகள் பலமாகும், சருமம் அழகு பெறும். வெந்தயத்தை வறுத்துப் பொடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, பால் சுரப்பு அதிகமாகும். மாதவிலக்கு நாட்களில் உண்டாகும் கோளாறுகளுக்கும் வெந்தயம் நல்ல மருந்து. உடல் சூட்டைத் தணித்து கர்ப்பப்பையைப் பலப்படுத்தும், மூலநோய்க்கும் நிவாரணம் தரும்.

உடல் ஆரோக்கியத்தை சீராக வைக்கும் சீரகம்!

 jeerakam க்கான பட முடிவு

உடலை சீராக வைக்க பயன்பட்டதால், சீரகத்துக்கு சீரகம் என பெயர் வந்தது என பெரியவர்கள் கூறுகின்றனர். சீரகத்தின் மருத்துவ குணத்தை அறிந்தவர்கள், குடிநீரில் சீரகத்தை ஊற வைத்து சீரகத் தண்ணீரை பருகுவது வழக்கம்.

சிலர் அதில் எலுமிச்சம் பழத்தை அறுக்காமல் முழுதாக போட்டு, அந்த தண்ணீரை பருகுவார்கள். தொடர்ந்து சீரகத்தை உணவில் சேர்த்து கொள்வதன் வாயிலாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சீரகத்தை வாயில் போட்டு, குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல் நீங்கும். திராட்சை ஜூசுடன் சீரகம் கலந்து பருகினால், ரத்த அழுத்தம் கட்டுப்படும். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் மனநோய் குணமாகும்.

நல்ல ஜீரண சக்தி கொண்டது சீரகம். இதனால் அடிக்கடி இதனை உணவில் சேர்த்து கொள்வது உடல் நலத்துக்கு நல்லது. சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து, சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் குணமாகும். சீரகத்தை எலுமிச்சம் பழச்சாறு விட்டு உலர்த்தி, தூளாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதை தினமும் ஒரு ஸ்பூன் வீதம் மோரில் கலந்து, குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத்தொல்லை நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்து, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், பித்தம் நீங்கும். சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால், எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேக பளபளப்பும் கிடைக்கும்.
சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு, கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும். சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறுடன் சேர்த்துப் பருகி வந்தால், கல்லீரல் கோளாறு குணமாகும்.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடிகள் தயாரிப்பில், சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயு தொல்லைக்கு மாமருந்து. சீரகம், நல்ல மிளகு பொடித்து, எண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நிற்கும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். மெலிந்து போனவர்கள், சீரகத்தை தூள் செய்து லேகியமாக சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

Wednesday, April 27, 2016

யோகாசனத்தின் அனைத்து பலன்களும் கிடைக்கும் தோப்புக்கரணம்

யோகாசனம் என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல. அது மனதையும்
கட்டுப்படுத்தக் கூடியது. யோகாசனம் செய்வதால் உடல் தசைகள் வலுப்பெறுகின்றன. உடலில் உள்ள மூட்டுகளின் இறுக்கம் தளர்ந்து நெகிழ்கின்றன. நாளமில்லாச் சுரப்பிகள் ஹார்மோன்களைக் கூடுதலாகவோ, குறைவாகவோ சுரக்காமல், சரியான அளவு சுரக்கும். குறிப்பாக தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகள் சரியாக வேலை செய்யும்.


சாதாரணமாக ஒவ்வொருவரும் நிமிடத்துக்கு 16 – 18 தடவை மூச்சுவிடுவோம். யோகாசனம் செய்தால் அது 12 -14 தடவைகளாகzககுறைந்துவிடும். அதாவது, அதிக நேரம் காற்றை உள்ளிழுத்து, வெளிவிடுவோம். இதனால் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும்.


மனதை ஒருநிலைப்படுத்த யோகாசனம் உதவும்.  மூச்சு மனதையும், உடலையும் இணைக்கும். மனம் சமநிலையில் இருக்கும் கோபப்படும்போது அட்ரீனல் சுரப்பி அதிகமாகச் சுரக்கும். இதனால் உடலில் இதயத் துடிப்பு அதிகரிக்கும்.  வியர்க்கும். பதட்டமாக இருக்கும். யோகாசனம் செய்தால் அட்ரீனல் சுரப்பியின் செயல்பாடு ஒழுங்குபடும்.


இவ்வளவு பயன் தரக்கூடிய யோகாசனத்தைக் கண்டு பலர் பயப்படுகிறார்கள். எடுத்தவுடனே உடலை நன்றாக வளைக்கக் கூடிய யோகாசனங்களைச் செய்யக் கூடாது. செய்யவும் முடியாது. தசைகளையும், மூட்டுகளையும் நெகிழச் செய்யக் கூடிய எளிய யோகாசனப் பயிற்சிகளில் ஆரம்பித்து, படிப்படியாக வேறு கடினமான யோகாசனங்களைச் செய்ய வேண்டும்.


சிலர் யோகாசனம் செய்வதற்கெல்லாம் நேரமில்லை என்பார்கள். யோகாசனமோ, வேறு எந்த உடற்பயிற்சியையோ செய்வதற்குச் சோம்பேறித்தனமாக இருப்பவர்கள் சொல்கிற சாக்குப் போக்கு இது. நேரமில்லை என்று சொல்பவர்கள், ஒரு மூன்று நிமிடங்கள் ஒதுக்கி


தோப்புக்கரணம் போட்டாலே போதும்! யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள். உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது  காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும்


இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது.  உடல் இயக்கம் சீர்படுகிறது. தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு


தோப்புக்கரணம் போட வேண்டும். பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.


உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க  வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும். இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் -  சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை.  இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம்  சீராகும்.


மூன்றுநிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை.


ஸ்பைசி ஓட்ஸ் மோர்


தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - அரை கப் (வறுத்து கொள்ளவும்)

ஸ்பைசி ஓட்ஸ் மோர்

தயிர் - அரை கப்

ப.மிளகாய் - 2

இஞ்சி துருவியது - 1 ஸ்பூன்

புதினா இலை - 1 கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சை பழம் - பாதி

தண்ணீர் - 1 கப்

செய்முறை :

•  ஓட்சில் தயிர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

• மிக்சியில் புதினா இலை, ப.மிளகாய், இஞ்சி போட்டு நன்றாக அரைக்கவும்.

• அடுத்து அதில் ஊறவைத்த ஓட்ஸ், தயிர் கலவையை ஊற்றி நன்றாக மென்மையாக அரைக்கவும்.

• அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் தண்ணீர், உப்பு, எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலக்கவும்.

• இதை பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

உடற்பயிற்சியை நிதானமாக செய்யுங்க

 udarpayirchi க்கான பட முடிவு

உடற்பயிற்சிகளை மிகவும் அதிக முறை செய்யும்போது தான் பிரச்சனைகள் உண்டாகின்றன.

நல் ஆரோக்கியத்தையும் நல்ல உடல்வாகையும் மேனி அழகையும் உறுதியான இதயத்தையும் பெற, அனைத்து உடல் உறுப்புகளும் சீராகச் செயல்பட, சில விதிமுறைகளை ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்க வேண்டும்.

உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி, ஓட்டம், பளு தூக்குதல், விளையாட்டுப் பயிற்சிகள் என எதுவாயினும், முதலில் சிறியதாகத் தொடங்கி, உடல் மற்றும் மனம் உறுதிபட தொடங்கியவுடன், கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த பகுதிக்கு முன்னேற வேண்டும். அப்போதுதான் இதய-நுரையீரல்களின் உறுதி, தசை மண்டலங்களின் உறுதி, எலும்பு மற்றும் எலும்பு இணைப்பில் உறுதி ஆகியவை கிட்டும்.

சிறப்பு பயிற்சிகளை இதயம்-நுரையீரல்கள் உறுதி செய்யுமாறு செய்ய வேண்டும் (Cardiorespiratory Endurance).

நம் உடலில் உள்ள அனைத்துத் தசைகளும் உறுதிபடச் செய்ய, அந்தந்த தசைப்பகுதிகளுக்கு அளவான பளுக்களை தேர்வு செய்து அந்த தசைகளின் தன்மைக்கேற்ப, ஒருநாள் உடலின் மேல் உறுப்பு தசைகளுக்கும், அடுத்த நாள் கீழ் உறுப்பு தசைகளுக்கும் மாறி மாறி பளு தூக்கும் பயிற்சி அவசியம் (Muscular Strength).

மெது நடைப்பயிற்சி, வேக நடைப்பயிற்சி, மெது ஓட்டம், மித ஓட்டம், வேக ஓட்டம் என அடுத்தடுத்து முன்னேற்றம் காண வேண்டும். இதனால் உடலின் முழுத் தசை மண்டலங்களும் உறுதிப்படுவதோடு, நிறைய ஆக்ஸிஜன் பெற்று, நல்ல ரத்த ஓட்டம் அடைந்து, நீங்கள் களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கலாம் (Muscular Endurance).

அளவான உடற்பயிற்சி, சீரான நடை / ஓட்டம், தேவையான பளு தூக்குதல், சைக்கிள் ஓட்டுதல், ஏரோபிக்ஸ், நீந்துதல், பரத நாட்டியம், கதகளி, குச்சுப்பிடி, மேலை நாட்டு ஆட்டக்கலைகள் என இவை அனைத்துமே உடலை நன்றாக வளைந்து கொடுக்கும் (High Level Range of Motion) திறமையை அதிகரிக்கும்.

தேவையில்லாத கொழுப்புதான் நம் உடலைக் கெடுக்கும் முதல் எதிரி.

ஒவ்வொரு நாளும் நம் உடலில் தேவைக்கு அதிகமாக உள்ள கொழுப்பு சக்தியை எரித்துவிட வேண்டும் (Burn unwanted Excess Calories). இதற்காக நீங்கள் தினமும் செய்துவரும் உடற்பயிற்சியின் பல தரங்கள், வகைகளை வேகமாக (Intensity) செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

– மேலே கூறிய அனைத்துப் பயிற்சிகளையும் 20 முதல் 60 வினாடிகள்… முடிந்தால் சற்று கூடுதலாக – சிறிது சிறிதாக வயதுக்கு ஏற்றவாறு கூட்டுவது (Volume) கொழுப்புச் சக்திகளை எரிக்க மிகவும் ஏற்றது. ஏரோபிக்ஸ் பயிற்சிகள் இதில் முதலிடம் பெறுகின்றன.

குழந்தை பிறக்க போவதற்கான 6 அறிகுறிகள்


 delivery pain க்கான பட முடிவு
பெண்களுக்கு வரும் வலிகளிலேயே பிரசவ வலி மிகவும் கொடியது. ஏனெனில் எந்த வலியை வேண்டுமானாலும் தாங்க முடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத் தாங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஆகவே கர்ப்பமாக இருப்பவர்கள், பிரசவ வலி வரப் போகிறது என்பதைத் எப்படி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு பிரசவ வலி வருகிறதென்றால், அதற்கென்று சில அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகளை முன்பே தெரிந்து கொண்டால், அந்த வலி ஆரம்பிப்பதற்கு முன்பே மருத்துவமனைக்கு சென்று விடலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்..

1. பிரசவ வலி வருவதற்கான அறிகுறிகளில் முக்கியமானது முதுகு வலி தான். எப்போது முதுகு வலி சாதாரணமாக வரும் வலியைவிட, அளவுக்கு அதிகமாக வருகிறதோ, அதை வைத்து பிரசவ வலி வரப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

2. கர்ப்பமாக இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சியினால் கருப்பை விரிவடையும். அதுவே குழந்தை வெளியே வர ஆரம்பிக்கிறதென்றால், அதாவது பிரசவ வலி வரப்போகிறதென்றால், அந்த கருப்பை சுருங்குவதற்கு ஆரம்பமாகும். அவ்வாறு கருப்பை சுருங்கும் போது எந்த ஒரு வலியும் இருக்காது. ஆனால் நன்கு கூர்ந்து கவனித்தால், கருப்பை சுருங்குவதை அறியலாம். ஆகவே அதை வைத்து நன்கு தெரிந்து கொள்ளலாம்.

3. கருப்பை வாய்க்குழாயிலிருந்து அதிகமான அளவில் சளி போன்ற திரவம் வெளியேற ஆரம்பிக்கும். அவ்வாறு வருவதுப் போல் தெரிந்தால், அதை வைத்தும் அறிந்து கொள்ள முடியும்.

4. சில நேரங்களில் கருப்பையிலிருந்து இரத்தம் வடிய ஆரம்பிக்கும். அவ்வாறு நிகழ்ந்தால், உடனே மருந்துவரை அணுக வேண்டும்.

5. ஏழாவது மாதத்திற்கு மேல் அடிக்கடி சிறுநீர் அவசரமாக வருவது போன்று இருக்கும். ஆனால் அதுவே பிரசவம் நடைபெறப் போகிறதென்றால், அப்போது சற்று வித்தியாசமாக உணர்வீர்கள். சொல்லப்போனால், வயிற்றில் ஒன்றுமே இருக்காது, இருப்பினும் அவசரம் என்பது போல் இருக்கும். ஏனெனில் அது வயிற்றில் இருக்கும் குழந்தை வெளியே வருவதற்கான ஒரு அறிகுறி.

6. ஏழாம் மாதத்திலிருந்து வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவை நன்கு உணர முடியும். ஆனால், பிரசவ வலி வருவதற்கு முன், குழந்தையின் அசைவு குறைந்துவிடும். ஏனெனில் அப்போது குழந்தை வெளியே வருவதற்கு ஒரு சரியான ஒரு நிலையை அமைந்து இருப்பதே ஆகும்.

- மேற்கூறியவையே பிரசவ வலி வரப்போவதற்கான அறிகுறி. ஆகவே இந்த மாதிரியான அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனே மருத்துவமனைக்கு செல்வது நல்லது.

தாயின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கருக்குழாய் கர்ப்பம்

 தாயின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கருக்குழாய் கர்ப்பம்


இந்த வகை கர்ப்பத்தில் மாதவிலக்கு தள்ளிப்போவது, மயக்கம் என எல்லா அறிகுறிகளும் இருக்கும். சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டிருக்கும், ஆனாலும் அந்தக்கர்ப்பம் ஆரோக்கியமானதா கர்ப்பப்பையில்தான் வளர்கிறதா என்பதை அந்தத்தாய் அறிய வாய்ப்பில்லை.

கர்ப்பப்பையில் வளர்வதற்குப் பதில் கருக்குழாயில் வளர்ந்தால் அந்தக்கருவை காப்பாற்றமுடியாது. கவனிக்காமல்விட்டால் தாயின் உயிருக்கும் ஆபத்தாகலாம். இயற்கையாக பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும் சேர்ந்து கரு உருவாகிறது. இதை கருக்குழாயானது எடுத்துச்சென்று கர்ப்பப்பையினுள் வைக்கிறது.

அங்கு அது வளர்கிறது. இது ஆரோக்கியமான கர்ப்பம். கருக்குழாயில் தொற்று இருந்தாலோ சிதைந்து போயிருந்தாலோ கருவானது கர்ப்பப்பைக்குள் நகர்த்தப்படுவது தடுக்கப்பட்டு கருக்குழாயிலேயே தங்கி வளரத்தொடங்கும். கர்ப்பப்பை மட்டுமே கருவைத்தாங்கி அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் ஈடுகொடுக்கும் சக்தி உடையது.

மிகவும் குறுகலான கருக்குழாயினுள் கருவானது வளரமுடியாமல் 40 முதல் 70 நாட்களுக்குள் குழாயையே வெடிக்கச்செய்துவிடும். சில நேரங்களில் கருவானது குழாயிலேயே அழுகிப்போகலாம். அதுவும் தாய்க்கு ஆபத்தானது. சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டாலும் கருவானது கர்ப்பப்பையில் இருப்பதை 38 முதல் 45 நாட்களில்தான் தெரிந்துகொள்ளமுடியும்.

அப்படித்தெரியாவிட்டால் கருக்குழாய் கர்ப்பமாக இருக்கலாம் என சந்தேகப்படலாம். இரத்தப்பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் கருக்குழாய் கர்ப்பமா என கண்டுபிடிக்கலாம். கருக்குழாயில் தங்கி வளரும் குழந்தையைக் காப்பாற்றமுடியாது. அதை வளர விடுவது தாயின் உயிருக்கே ஆபத்தானது என்பதால் ஊசி அல்லது மாத்திரை மூலம் அதை மடியச்செய்யவேண்டும்.

அறுவை சிகிச்சையின் மூலம் கருவை வெளியே எடுத்து கருக்குழாயை பாதுகாக்கலாம். சிலருக்கு கருக்குழாயானது அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் கருக்குழாயையும் நீக்கவேண்டி வரும். இரண்டில் ஒரு கருக்குழாயை மட்டும் நீக்குவதால் அந்தப்பெண் பயப்படத் தேவையில்லை. கர்ப்பம் தரிக்க ஒரு கருக்குழாயே போதுமானது.