Pages

Thursday, February 26, 2015

டீத்தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: கிட்னியை பாதிக்கும் பயங்கரம்!


tea estate of india க்கான பட முடிவு

டீத்தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: கிட்னியை பாதிக்கும் பயங்கரம்! 
‘‘இப்படியொரு ஆய்வு முடிவை நாங்களே எதிர்பார்க்கவில்லை. இந்திய தேயிலைகளில் கலந்திருக்கும் விஷம், பூச்சிக் கொல்லிகள் மூலம் வந்தது. லட்சக்கணக்கான தேயிலைத் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான அப்பாவி மக்களும் இந்த டீத்தூளால் பாதிக்கப்படுவார்கள்’’ என வருத்தத்தோடு பேசுகிறார்கிரீன்பீஸ்அமைப்பைச் சேர்ந்த அஸ்வினி. உலகளாவிய இந்தச் சுற்றுச்சூழல் அமைப்பின் இந்தியக் கிளையில் பணியாற்றும் அஸ்வினி, இந்தத் தேயிலை ஆய்வுக் குழுவில் ஒருவரும் கூட!

‘‘
இந்தியாவின் டீ தொழில் 175 வருட கால பாரம்பரியம் மிக்கது. இங்கு சுமார் 9.8 லட்ச ஹெக்டேர் நிலத்தில் டீ பயிரிடப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் டீ விளைந்தாலும், முக்கால் வாசி உற்பத்தி அசாம், மேகாலயா உள்ளிட்ட இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில்தான். இங்கேயும் சின்னச் சின்ன தேயிலை விவசாயிகள் என்று பார்த்தால் அவர்கள் வெறும் 26 சதவீதம்தான் இருக்கிறார்கள்.

மற்றபடி பெரும் நிறுவனங்கள்தான் தேயிலை விவசாயத்தில் கோலோச்சியிருக்கின்றன. அப்படிப்பட்ட நிறுவனங்களின் மிகப் பிரபலமான 49 பிராண்டுகளைத் தேர்ந்தெடுத்து நாங்கள் ஆய்வு செய்தோம்.

அசபேட், அசடேமிப்ரிட், ஆந்த்ராக்யுனான், க்ளோதி யானிடின், சைபர்மெத்ரின் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லிகள் அந்த புகழ்பெற்ற பிராண்ட் டீத்தூள்களில் கலந்திருப்பது ஆய்வில் தெரிய வந்தது. இவையெல்லாம் ஒருபோதும் தேயிலையில் பயன்படுத்தவே கூடாது என இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள்!’’ என அதிர வைக்கும் அஸ்வினி, தடையை மீறி இந்தப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத் தப்படுவது எதனால் என்பதையும் விளக்குகிறார்...

‘‘
இந்தியாவில் பூச்சிக்கொல்லிகள் போன்ற ரசாயனங்களைப் பதிவு செய்வதற்கென்றே மத்திய அரசின் அமைப்பு ஒன்று இருக்கிறது. இதை சி..பி.ஆர்.சி என்பார்கள். இதில் இதுவரை 248 வகையான பூச்சிக்கொல்லிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதில் 24 முதல் 34 வகையான பூச்சிக்கொல்லிகளைத்தான் டீக்களில் பயன்படுத்த வேண்டும் என அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு தவிர தேயிலை குறித்த விவகாரங்களுக்காகவே அரசு சார்பாகடீ போர்டுஎன்ற அமைப்பும் இயங்குகிறது. இந்த போர்டும் தேயிலையில் என்னென்ன ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம் என ஒரு லிஸ்ட்டைச் சொல்கிறது. டீயில் நாம் எடுத்துக்கொள்வது இலையைத்தான். தெளிக்கும் பூச்சிக்கொல்லிகள் இலையிலேயே தங்கிவிடும் என்பதால்தான் இப்படிக் கட்டுப்பாடுகள்.

இந்த சி..பி.ஆர்.சி மற்றும் டீ போர்டின் கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும், ஒவ்வொரு மாநிலமும் அங்கிருக்கும் விவசாயப் பல்கலைக்கழகங்களின் ஆய்வு வழிகாட்டுதலின் பேரில்தான் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த அனுமதிக்கும். இப்படிப் பார்த்தால் ஒரு டீ விவசாயி இந்த மூன்று அமைப்புகளில் யார் சொல்வதைப் பின்பற்றுவது என்ற குழப்பம் வந்துவிடுகிறது. இந்தக் குழப்பத்தை சாதகமாக்கிக் கொண்டுதான் எல்லா பூச்சிக் கொல்லிகளையும் வரைமுறை இன்றி பயன்படுத்துகிறார்கள்.

 
அது மட்டுமின்றி, தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகளை அனுமதிக்கப்பட்ட மருந்துகளோடு கலந்து காக்டெயில் போலாக்கி தேயிலைச் செடிகளில் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்திருக்கிறது. டீயில் பயன்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லிகளைப் பற்றி தெளிவான கொள்கை ஒன்றை அரசு வகுக்க வேண்டும் என்பதையே இந்தக் குளறுபடிகள் காட்டுகின்றன’’ என்கிறார் அவர்.

இப்படியே இந்திய டீக்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலப்பது தொடர்கதையானால், மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும்? அதையும் அஸ்வினியே பட்டியலிட்டார்...‘‘இதெல்லாம் ஸ்லோ பாய்ஸன் போன்றவை. உடனடியாக பாதிப்புகள் தெரியாது. ஆனால், பாதிப்பு ஏற்படுவது உறுதி. உதாரணமாக வயிற்றுவலியில் துவங்கி தோல் நோய்கள், கிட்னி பாதிப்பு, உடல் வளர்ச்சிக் குறைபாடு, கல்லீரல் பிரச்னைகள், தாம்பத்யக் குறைபாடு வரைக்கும் இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாதிப்பு ஏற்படலாம்.

எங்கள் ஆய்வில் ஒரு பகுதியாக இந்த பாதிப்புகளையும் பட்டியலிட்டிருக்கிறோம். அரசுக்கும், டீ உற்பத்தியாளர்களுக்கும் இதையெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். குறிப்பாக விவசாயிகளுக்கு, ‘நான்  பெஸ்டிசைட் மேனேஜ்மென்ட்’... அதாவது, பூச்சிக்கொல்லி இல்லாத முறையில் டீ உற்பத்தி செய்ய அறிவுறுத்தியிருக்கிறோம். ஆந்திராவில் இதைத்தான் பின்பற்றி வருகிறார்கள்.’’

இந்த அறிக்கை வெளியானதுமே கிரீன்பீஸ் அமைப்பு மீது வழக்கு போடப் போவதாக தேயிலை சார்ந்த பல அமைப்புகள் கொதித்துள்ளன. ஆனாலும் சில முன்னணி நிறுவனங்கள், ‘பூச்சிக்கொல்லியின் சுவடே இல்லாத டீத்தூளைத் தருவோம்என உறுதிமொழி எடுத்திருப்பது ஆறுதலான விஷயம்

‘‘
தேயிலைச் செடி வளரும் பருவமான ஏப்ரலில் எங்களது ஆய்வு கண்டுபிடிப்பைச் சரிபார்த்து திருத்திக்கொள்வதாக அவர்களும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். மாற்றம் வரும் என அரசையும் உற்பத்தியாளர்களையும் நம்புவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை!’’  நிதர்சனத்தைச் சொல்லி முடிக்கிறார் அஸ்வினி.இதற்கு புளியங்கொட்டை கலப்பட டீயே பரவாயில்லை போலிருக்கிறதே!

Wednesday, February 18, 2015

முதுமையை தடுத்து இளமை தரும் கொய்யா


guava fruit க்கான பட முடிவு

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி சாப்பிடக்கூடியது கொய்யாப் பழம். இதில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது. வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துகளும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் கொய்யா பழத்தில் நிறைந்துள்ளது. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். இம்மரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்ப்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும்.

கொய்யாப்பழத்தை அரிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் படும்படி நன்றாக மென்று தின்பதே நல்லது. இதன்மூலம் பற்களும், ஈறுகளும் பலப்படும். வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் உள்ளது. எனவே, வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யாவின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. இதனால் தோலுடன் சாப்பிட வேண்டும்.

முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. மதுபோதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம். உணவு சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல.

சாப்பிட்ட பின்போ அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட்டால் நல்லது. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல், தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் நோய் அதிகமாகும். ஒரு சிலருக்கு மயக்கம் ஏற்படும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடவே கூடாது. மற்றவர்கள் கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடாமல் இருப்பது சிறந்தது. இரவில் சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

ஏலக்காயில் மருத்துவகுணம் ஏராளம்

நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம். சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.

இதில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது. ஏலக்காயை தேநீர் பாயாசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் அதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம், படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது. எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது.

ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன. ஏலக்காய் ஆண்மைக் குறைவு பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியமும் உண்டாக்கும். இரவு ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி தொண்டைக்கட்டு உள்நாக்கில் வலி குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும். சில சமயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்கு நெஞ்செரிச்சலும் வாய்வுத் தொந்தரவும் இருக்கும். இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது. இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து விழுங்கினாலும் உடல் ஜீரணமாகும். பாலில் சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து இருபாலரும் தினமும் அருந்தி வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் குணமாகும்.

அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையே பயன்படுத்தினால் போதும். இதே போல ஏலக்காயை சூயிங்கம்மிற்கு பதிலாக மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெல்லிக்காய்ச் சாறில் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளைச் சேர்த்துத் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் மேகவெட்டை நோய்க்கு தீர்வு கிடைக்கும். இத்துடன் சிறுநீர்ப்பை சுழற்சியும் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும். அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும். பிறகு புதினாக் கீரையில் 5, 6 இலைகள் மட்டும் இதில் போட்டுக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும்.

நறுஞ்சுவையும் நறுமணமும் உள்ள மருந்துப்பொருள் ஏலக்காய். இதன் காரணத்தால் மருந்துத் தயாரிப்பாளர்கள் பலரும் பயன்படுத்தி நோய்கள் விரைந்து குணமாகவும் உடலுறுப்புகளை தூண்டிவிடவும் பயன்படுத்துகின்றனர். குறைந்தபட்சம் தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்தால் கூட நல்ல சுறுசுறுப்பைப் பெற முடியும். அதோடு ஜீரணக்கோளாறு இல்லாமல் ஆரோக்கியமான உடலையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். பலர் சூயிங்கம் சாப்பிடுவார்கள். இதனால் எந்த பலனும் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். பசி எடுக்கவில்லை. சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.

Tuesday, February 17, 2015

பேய்ப்புடலைங்காயின் மருத்துவப் பயன்கள்

இது இரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது-. தோல் நோய்களை விரைவில் குணப்ப டுத்த வல்லது. கிருமிகளை அழிக்கவல்லது. பசியைத் தூண்டக்கூடியது. மலத்தை இளக்கி வெளியேற்றி மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுவது, பித்தநோய்களைத் தணிக்ககூடியது. ஈரலைப் பலப்படுத்த வல்லது. இதனுடைய வயிற்றுப் புழுக்களைக் கொல்லக்கூடியது.

காய்ச்சலைத் தணிக்ககூடியது. இலைகள் மேற்பூச்சாக பூசுவதால் தலையில் திட்டுதிட்டாக முடி உதிர்ந்து ஆங்காங்கே வழுக்கை போல் தோன்றுகின்ற புழுவெட்டு  குணமாகும். டிரைகோ சாந்தஸ் குகுமெரினா என்பது பேய்ப்புடலின்  தாவரப்பெயர் ஆகும். அமிர்தபலா, வனபட் டோடா என்பவை அதன் வடமொழிப் பெயர்கள் ஆகும்.

பேய்ப்புடலின் இலைகளை மைய அரைத்து பசைபோல் ஆக்கி தோல் நோய்களின் மீது பூசி வர எக்ஸிமா என்று சொல்லக்கூடிய தோலில் நீர் வடியச் செய்யும் கொப்புளங்களோடு நமைச்சலும் தருகின்ற துன்பம் விரைவில் குணமாகும்.

* பேய்புடல் இலைகள் நான்கு அல்லது 5 இலைகளை எடுத்து சுத்திகரித்து ஒரு டம்ளர் நீரிலிட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறவைத்து எடுத்து வடிகட்டி ஆறாதபுண்கள், நாற்றமெடுத்து புழுக்கள் வைத்த புண்கள், சர்க்கரை நோயால் வந்த கட்டிகள் ஆகியவற்றின் மீது ஊற்றிக் கழுவி வர விரைவில் குணமாகும்.

* இலைப் பசையை நாட்பட்ட கட்டிகள், சீழ்வடியும் ஆறாப் புண்கள் ஆகியவற்றின் மேல் பூசும் மருந்தாகவும்  பயன்படுத்த விரைவில் அவை ஆறிவிடும்.

* பேய்ப்புடல் இலையைக் கொழுந்தாக எடுத்து நான்கைந்து இலைகளை ஓர் டம்ளர் அளவு நீர்விட்டு கொதிக்கவைத்து தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொடுக்க வயிற்றுப்போக்கினை உண்டு பண்ணி வயிற்றைச் சுத்தம் செய்யும்.

* இலையை அரைத்துப் பிழிந்த  சாறு 5 முதல் 10மி.லி வரை உள்ளுக்குக் கொடுக்க வாந்தியாகி பித்தம் வெளியேறும்.

* இலைச்சாற்றை தலையில் தேய்த்து வைத்திருந்து சிறிது நேரம் சென்று குளித்துவிட தலைமுடி கொட்டுவது நிற்கும்.

* இளம் வழுக்கை என்கிற பாதிப்புக்கு ஆளான  ஆண், பெண் இருபாலாருக்கும் புடலங்காய் இலைச் சாறு உன்னத பலனைத்  தருவதாக இருக்கும். புடலஞ்செடியின் இளம் இலைகளைச் சேகரித்து சுத்திகரித்து அரைத்துப் பிழிந்த சாற்றில் அன்றாடம் காலையில் 30மி.லி வரை குடித்து வருவதால் இளம் வழுக்கைத் தலையிலும் புழுவெட்டால் ஏற்பட்ட திட்டுத் திட்டான வழுக்கையும் நாளடைவில் மாறி தலைமுடி வளரும்.

இந்நிலையில் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதும் புடலம் இலையைக் கசக்கித் தயாரித்த சாற்றை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து வைத்திருந்து பின் தலைக்கு குளிப்பதும் என்கிற பழக்கம் விரைவில் குணம் தர ஏதுவாகும்.

உடலில் பித்தம் அதிகரித்து பசியின்மை, காய்ச்சல், உடல் சோர்வு, குமட்டல், ருசியின்மை என்ற தொல்லைகள் தொடர்ந்து துன்பம் தரும் போது புடலங்கொடியின் இலைச் சாற்றை தீ நீராக்கி அத்துடன் கொத்துமல்லிச்சாறு அல்லது தனியாத் தூள் சேர்த்துக் காய்ச்சி சுவைக்க பனங்கற்கண்டு சேர்த்து பருகுவதால் பித்தம் தணிந்து ஆரோக்கியம் அதிகரிக்கும்.

* கடுமையான காய்ச்சல் ஏற்படும் போது 50கிராம் புடலங்காய்த் துண்டுகளையும் அதில் சம அளவு சேர்த்து மல்லி இலையையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு நீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவிட்டு காலையில்  வெறும் வயிற்றில் அந்த ஊறலைக் குடித்து வர  கடுங்காய்ச்சலும் தணிந்து போகும். இந்த தீநீர் பித்த சம்பந்தப்பட்ட நோய்களையும் நாவறட்சி, மலச்சிக்கல் போன்றவற்றையும் குணமாக்கும்.

* கீல்வாதம் என்னும் மூட்டுவலி என்னும் நோயால்  பாதிக்கப்படுவோர் இலைச்சாற்றை இரண்டு தேக்கரண்டி உள்ளுக்கக் குடிப்பதாலும் வலிகண்ட இடங்களில் மட்டுமின்றி உடல் முழுதும் தேய்த்து வைத்திருந்து குளிப்பதால் நாளடைவில் நல்ல நிவாரணம் கிடைப்பதோடு கல்லீரலிலும் ஆரோக்கியம் திகழும்.

* 30முதல் 50கிராம் வரை எடையுள்ள புடலங்காயைக் கொடியின் இலைகள் இளசாக தேர்ந்தெடுத்து சமபங்கு கொத்துமல்லி இலை சேர்த்து நீரிலிட்டு ஊறவைத்து காலையில் அதன் தெளிந்ந நீரைக் குடித்து வருவதால்  நாளடைவில் மஞ்சள்காமாலை மறையும்.

* புடலங்காயின்  இலைச்சாறு 5 முதல் 10மி.லி  அளவுக்கு உள்ளுக்குப்  புகட்டுவதால்  பேதியாகும். வாந்தி எடுக்க வைக்கவும் மருந்தாகும்.

* நன்கு முற்றிப் பழுத்த புடலையின் விதைகளை மட்டும் நீக்கி விட்டு விதையை உலர்த்தி வைத்து கொண்டு இரவில் நீரிலிட்டு ஊற வைத்திருந்து காலையில் அதன் நீரைப் பருக பேதியாகும். இதனால் குடல் சுத்தமாகும். புடலங்காயின் விதைகளை பேதி மருந்தாக பயன்படுத்த வேண்டும்.

* புடலம் வேரை 5முதல் 10 கிராம் வரை எடுத்து நீரிலிட்டுக் காய்ச்சி தீநீராக்கி குடிக்க பித்தத்தைப் போக்கும். வயிற்றிலுள்ள கிருமிகளை வெளியேற்றும். பேதியைக் கட்டுப்படுத்தும். 

Monday, February 16, 2015

கணைய புற்றுநோய் அணுக்களை அழிக்கும் பாகற்காய்

bitter gourd க்கான பட முடிவு


கசப்புச் சுவையுள்ள பாகற்காய் பல நல்ல பலன்களைக் கொண்டிருக்கிறது. எனவே முகத்தைச் சுளிக்காமல் பாகற்காயை சமைத்துச் சாப்பிட்டாலோ, ஜூஸாக தயாரித்துக் குடித்தாலோ கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்...

மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்த்துவந்தால் அல்லது பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். இதில் உள்ள மோர்மோர்சிடின் மற்றும் சரடின் என இரண்டு ஆன்டிஹைபர் கிளைசீமிக் பொருட்கள், தசைகளுக்கு ரத்தம் மூலம் சர்க்கரையைக் கொண்டு செல்லும் முக்கிய வேலையைச் செய்கின்றன.

அதுமட்டுமல்லாது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகின்றன. பொதுவாகவே, சரியான வேளையில், சரியான அளவில் உணவு உண்ணுவது மிகவும் முக்கியம். சரியாக உணவு உண்ணாத பட்சத்தில், பலவிதமான நோய்கள் தொற்றிக் கொள்ளும். ஆனால் தொடர்ந்து நமது உணவில் பாகற்காயைப் பயன்படுத்தி வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும், எனவே பசியும் அதிகரிக்கும்.

இன்று புற்றுநோய் பலவித ரூபங்களில் மனிதர்களைப் பயமுறுத்தி வருகிறது. ஆனால் கணையப் புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் பாகற்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதிலுள்ள புற்றுநோய் எதிர்ப்புப் பொருட்கள், கணையப் புற்றுநோய் அணுக்கள் குளுகோசை பயன்படுத்துவதைத் தடுக்கும்.

எனவே அணுக்களுக்கு வரவேண்டிய ஆற்றல் வராமல் போவதால் அவை அழிந்துவிடும். தினமும் காலையில் வெறும் வயிற்றில், ஒரு கப் பாகற்காய் ஜூஸ் உடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை ஜூஸை கலந்து குடித்து வரவும். இதை தொடந்து 36 மாதங்கள் வரை செய்து வரும்போது, தோல் அலற்சி தொடர்பான பிரச்சினைகள் தீரும்.

பாகற்காயில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ உள்ளதால், கண் தொடர்பான தொந்தரவுகளை நீக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்களும் கண்களுக்கு நன்மை பயக்கும். இன்றைய சூழலில் நாம் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறி, பாகற்காய். அதை ஒதுக்காமல் இருந்தால் நமக்கு நன்மையே!