பொது இடங்களில் உள்ள கழிப்பறைகள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள், உடை மாற்றும் அறைகள் என பெண்கள் செல்லும் போது, தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது போன்ற இடங்களில் பெண்கள் எவ்வாறு முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது என தெரிந்து கொள்வது அவசியம்.
நீங்கள் உடை மாற்றும் அறைக்குள் நுழையும் முன் இந்த சோதனையை செய்து பாருங்கள். அறைக்கு வெளியே உங்களால் மொபைல் அழைப்புகளை மேற்கொள்ள முடிகின்றது, ஆனால் அறைக்குள் நுழைந்த பின் உங்களால் அழைப்பு செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் உஷார் அடையவேண்டும். அங்கே கேமரா மறைத்து வைக்கப்பட்டு உள்ளது என்பது உறுதி.
ஏன் என்றால் இந்த வகை கேமிராக்கள் தகவல்களை பரிமாற்ற செய்யும் போது அதன் மின் அலை பரிமாற்றத்தின் குறுக்கீடு காரணமாக உங்கள் மொபைல் அழைப்பை மேற்கொள்ள முடியாமல் போகும்.
பொது இடங்களில் இருக்கும் கண்ணாடிகள், உஷார்!
நாம் அன்றாடம் செல்லும் பொது இடங்கள், ஹோட்டல்கள், மால்கள், தியேட்டர்கள் மற்றும் பிற இடங்களிள் உள்ள கழிப்பறைகள், குளியலறைகள், அறைகள், உடை மாற்றும் அறைகளின் சுவர்களில் தொங்கி கொண்டிருக்கும் கண்ணாடிகளில் ஓளிந்திருக்கின்றது ஓர் அபாயம்.
உண்மையில் அவை சாதாரண கண்ணாடிகளா அல்லது 2 வழி கண்ணாடிகளா என கண்டறிவது அவசியம். இவ்வகை கண்ணாடிகளுக்கு பின் இருந்து நமது அந்தரங்கங்களை படம் பிடிக்கும் மோசடி கும்பல் பெருகிவருகின்றது. 2-வே எனப்படும் 2 வழி கண்ணாடிகள், கண்டறிவது எப்படி? இதை சோதிக்க மிக எளிய வழி உள்ளது.
கண்ணாடியின் மேற்பரப்பில் உங்கள் விரல் நுனி படும்படி வைக்கவும். அப்படி வைக்கும் போது உங்கள் விரல் நகத்திற்கும் நிழல் பிம்பமான கண்ணாடியில் உள்ள விரலுக்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கும் என்றால் அது ஒரு சாதாரண கண்ணாடியாகும். இதற்கு மாறாக உங்கள் விரல் நேரடியாக பிம்பத்தை தொடும் என்றால் அது ஒரு 2 வழி கண்ணாடி, ஜாக்கிரதை! (யாரோ மறுபக்கத்தில் இருந்து உங்களை பார்த்து கொண்டிருக்கலாம்).
சாதாரண கண்ணாடியில் வெள்ளி பூச்சானது கண்ணாடியின் உட்புறத்தில் பூசப்பட்டுள்ளதால் இந்த இடைவெளி உருவாகின்றது. ஆனால் 2 வழி கண்ணாடிகளில் வெள்ளி பூச்சு மேற்பரப்பிலேயே பூசப்படுவதால் இடைவெளி இருக்காது.
பொது இடங்களில் நாம் இருக்கும் போது இது போன்றவற்றை மனதில் கொண்டு எச்சரிக்கையோடு நடந்து கொள்ளவேண்டும்.பெண்கள் இது போல இடங்களுக்கு செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.