Pages

Showing posts with label ஸ்வீட் சாப்பிட. Show all posts
Showing posts with label ஸ்வீட் சாப்பிட. Show all posts

Friday, July 11, 2014

ஸ்வீட் சாப்பிட இஷ்டமா உங்களுக்கு?

பண்டிகை என்றாலே  நம் வீட்டிலும் சரி, உறவினர்கள் வீட்டிற்கு சென்றாலும் சரி சாப்பிட கொடுப்பது ஸ்வீட்தான். ஆனால் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?

100 கலோரியை நமது உடலிலிருந்து அகற்ற  வேண்டுமானால் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் 30 நிமிடம் நடந்தாக வேண்டும். ஆக இதனை ஞாபகத்தில் வைத்துச் சுவையுங்கள்.

குலோப்ஜாமூன்:
பால், மாவு கலந்து மாவை எண்ணெய்யில் பொரித்து, ஜீராவில் ஊற வைத்து எடுத்த ஒரு குலோப்ஜாமூனில் சராசரியாக 250 கலோரிகள் உள்ளன.

அதே சமயம் ரசகுல்லா செய்து சாப்பிடீர்களேயானால் அதன் கலோரி மதிப்பு-120 கலோரிதான். இதில் சர்க்கரை கம்மி, மேலும் பொரிக்கப்பட்டதல்ல என்பதும் உண்மை!

பூந்தி லட்டு:

கடலைமாவை பிசைந்து உருட்டி சூடான எண்ணையில், ஜார்னியல் தேய்த்து, காரப் பூந்தியை உருவாக்கி, ஜீராவில் கலந்து, பிடித்து சாப்பிடுவது. இதில் சர்க்கரை அதிகம். ஊட்டச்சத்து குறைவான பட்சணம். இதன் சராசரி மதிப்பு 270 கலோரி.

இதற்கு பதிலாக பாசிப்பருப்பு உருண்டை செய்து சாப்பிடலாம். இதில் சர்க்கரையின் அளவு கம்மி, அதே சமயம் புரோட்டின் சத்து அதிகம். இதன் சராசரி மதிப்பு 180 கலோரி மட்டுமே.

ரவா கேக் அல்லது ரவ சீரா:

ரவையை வறுத்து செய்யப்படுவது அதிக கொழுப்பு. சர்க்கரை மற்றும் கர்ப்ஹோஹைடிரேட்ஸ் அதிகம். இதன் சராசரி மதிப்பு-270. இதற்க்கு மாறாக அரிசி கீர் செய்து சாப்பிடலாம். இதன் ஊட்டச்சத்து பூரோட்டின் ஆகியவை உடலுக்கு நல்லது. இதன் சராசரி கலோரி மதிப்பு -180.

ஜாங்கிரி:

மைதா மாவு-எண்ணெய்-சர்க்கரை இணைந்த மற்றொரு இனிப்பு. இதன் கலோரி மதிப்பு-250. இதற்கு மாற்றாக ரசமலாய் செய்து சாப்பிடலாம். பொரிக்காததாலும், பால் அதிகம் சேர்க்கப்படுவதால்  உடலுக்கு நல்லது. இதன் ஒரு பீஸ் சரசாரி கலோரி மதிப்பு 150 மட்டுமே.

ஆக சாப்பிடுங்க! ஆனா அளவா சாப்பிட்டீங்கன்னா, உங்க ஆரோக்கியத்துக்கு நல்லது.