Pages

Showing posts with label லிவ்விங் ரூம். Show all posts
Showing posts with label லிவ்விங் ரூம். Show all posts

Saturday, November 29, 2014

தேடுறதையே வழக்கமா வச்சிருப்பவர்களுக்கு....!

உண்மையை சொல்லுங்கள்... ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பொருளை எங்கேயாவது மறந்து வைத்துவிட்டு பதறி தேடுவீர்கள் தானே?! இந்த அனுபவம் எல்லோருக்கும் ஏற்படும் என்றாலும் அதை எளிதாக தடுத்து விடலாம்.

எவ்வளவு பெரிதாக வீடு இருந்தாலும்... வசதி இருந்தாலும் அந்தந்த பொருட்களை அந்தந்த இடத்தில் வைக்காமல் இருந்தால் வீடும் நன்றாக இருக்காது... எந்தப் பொருளை எடுக்க வேண்டும் என்றாலும் அவஸ்தைப்பட வேண்டியது தான்.
 

உதாரணமாக உடைகள் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். அதற்கான இடத்தில் அழகாக அடுக்கி வைத்து விட்டாலே போதும்... உடைகளும் அழுக்காகாமல் சுத்தமாகவும், அந்த அறையும் உங்கள் முகத்துக்கு மேக்கப் போட்டது போல் அழகாக இருக்கும். இதை பார்க்கும் உங்களுக்கே மனசு சந்தோஷமாக இருக்கும்.
இப்படி ஒவ்வொரு பொருட்களையும் அந்தந்த இடத்தில் பொருத்தமாக வைத்தால் வீட்டை சுத்தப்படுத்துவது ரொம்ப ஈஸி. இதைப் பார்க்கும் குழந்தைகளுக்கும் அந்தப் பழக்கம் தொடரும். அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் சொத்தும் இதுதான்.


உங்களிடம் நிறைய பணம் இருந்தால்... கடைக்கு செல்லும்போதெல்லாம் ஏதாவது ஒரு பொருளை வாங்கி வருவீர்கள். ஆனால் அதற்கு முன்னால் அந்தப் பொருளை வீட்டில் வைப்பதற்கு இடமிருக்கிறதா? என்பதை யோசித்துப் பார்த்து வாங்குவது நல்லது.


புதிது புதிதாக உடைகள் வாங்கினால் அவைகள் சீக்கிரத்திலேயே பழைய துணிகள் ஆகிவிடும். சிலரோ மொத்தமாக உடைகளை வாங்கி திணிப்பார்கள். ஒரே நாளில் பத்து துணிகள் வாங்கி வைப்பதால் எந்த லாபமும் இல்லை. அதே நேரத்தில் தேவையில்லாததை, பழையதை தூக்கி எறியவும் வேண்டும்.
 

பெண்களுக்கு முகம் போன்றது "லிவ்விங் ரூம்". விருந்தினர்கள் வந்து
 பார்த்தாலும் "அறையை அழகாக வைத்திருக்கிறாயே?!" என்று ஆச்சரியப்படும் அளவிற்கு வைத்திருக்க வேண்டும். அந்த அறையில் டிவி ஸ்டாண்ட் மற்றும் ஷோகேஸ் ஆகியவற்றை முக்கியமாக பாதுகாப்பாக வைக்கலாம். டிவி, மியூசிக் சிஸ்டம் மற்றும் டிவிடி பிளேயர் ஆகியவற்றை "லிவ்விங் அறை"யில் வைக்கலாம்.

அதேபோல் பத்திரிகை, புத்தகங்கள், சிடிக்கள் ஆகியவற்றை ஷோகேஸ்ஸில் அழகாக அடுக்கி வைக்கலாம். "லிவ்விங் ரூம்" சின்னதாக இருக்கும்பட்சத்தில் அறையின் மூலையில் டிவி ஸ்டாண்ட் வைக்கலாம். அழகான படங்கள் வைத்திருக்கும் பாக்ஸில் டிவியை இணைத்து வைத்தால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.