Pages

Showing posts with label ரத்த தானம். Show all posts
Showing posts with label ரத்த தானம். Show all posts

Monday, September 8, 2014

உயிர் காக்கும் உன்னத தானம்!




ரத்ததானம் அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது ரத்தத்தைப் பிறருக்கு பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி ரத்தம்வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த ரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் மீண்டும் உற்பத்தியாகிவிடும்.
ரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ரத்த அணுவும் மூன்று மாத காலத்தில் தானாக அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. ரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே ரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

ரத்த தானம் செய்வதற்கு தேவையான தகுதிகள்: 

ரத்த தானம் செய்வோரின் வயது 18 லிருந்து 60 வயதிற்குள் இருத்தல் வேண்டும். ரத்த செய்வோரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். ஆண், பெண் இரு பாலரும் ரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள் .

இருபாலருக்கும் பொதுவான தகுதிகள் :


எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராக இருத்தல் கூடாது, கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப்படுத்தி இருத்தல் கூடாது. கீழ் கண்ட நோய் தாக்கம் ஏற்ப்பட்டவர் எனின் ரத்த தானம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 

பெண்கள் ரத்த தானம் செய்ய தேவையா தகுதிகள் :

மாதவிடாய் காலங்களில் ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும். தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும். வேறு எதாவது குறைப்பாட்டிற்காக சிகிச்சை பெறுபவர்களும் ரத்த தானம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கடைபிடிக்க வேண்டியவை:

ரத்த தானம் செய்ய விரும்புவர்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் எனில், மது அருந்தியதில் இருந்து 24 மணி நேரம் ஆகியிருத்தல் அவசியம். புகை பிடிக்கும் பழக்கமுடையவராக இருப்பின் , புகை பிடித்த பின்னர் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு பிறகு ரத்த தானம் செய்வது நல்லது. ரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே ரத்த தானம் செய்ய வேண்டும். ரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம். ரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புவர் குறைந்தது மூன்று மாத இடைவெளிக்குப் பிறகே ரத்த தானம் செய்ய வேண்டும்.