Pages

Showing posts with label முகத்தில் எண்ணெய் பசையை போக்க. Show all posts
Showing posts with label முகத்தில் எண்ணெய் பசையை போக்க. Show all posts

Sunday, April 12, 2015

கோடை காலத்தில் முகத்தில் அதிகரிக்கும் எண்ணெய் பசையை போக்க...


 oil skin க்கான பட முடிவு
சருமம் 3 வகையானது. உலர்ந்த சருமம், எண்ணெய் பசை சருமம், சாதாரண சருமம் என்று உள்ளது. இதில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு கோடை காலம் மேலும் எண்ணெய் பசையை அதிகரிக்க செய்யும். இதனால் முக அழகு கெடும். எண்ணெய் பசை நீங்க இயற்கை மருத்துவ குறிப்புகள் ஏராளமாக நடைமுறையில் உள்ளது. 

அவை பின்வருமாறு:

எண்ணெய் பசை சருமத்தினர் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர் கடலைமாவு, எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிதுநேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும். வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம்.

வெள்ளரிச்சாற்றுடன் பால் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும். தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன் வெள்ளரிப்பழம் அல்லது ஒட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம். பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் காரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால் அதிகமாக எண்ணெய் வழிவது குறையும். 

எண்ணெய் பசை சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால் எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும். மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும். சோளமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய் பசை நீங்கும்.

எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது மிக நல்லது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத்தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது.