Pages

Showing posts with label மிளகின் மருத்துவ குணங்கள். Show all posts
Showing posts with label மிளகின் மருத்துவ குணங்கள். Show all posts

Friday, March 21, 2014

மிளகின் மருத்துவ குணங்கள்

மிளகு
நறுமணப் பொருளான மிளகு இயற்கை வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம்வீட்டில் சமைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக் கொண்டால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும் என்கின்றனர் நிபுணர்கள். மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளது.

கருப்பு மிளகு நோய் அலர்ஜி, எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிகச்சிறந்தது. இது சுவாசக் கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது.

மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது. வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று.

மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவைகளை நீக்குகிறது. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.

மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மேலும் இரத்த சோகை, ஆண்மைக் குறைவு, தசை விகாரங்கள், இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாச பிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து. மேலும் பல் வலி, பல் சிதைவு போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர். மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.

நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது. புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்தலாம். உடலின் ஒட்டு மொத்த நலனிற்கும் மிளகு நல்லது.

ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். ஆக்சிஜனேற்றியாக செயல்படும் மிளகு புற்றுநோய், இதயநோய், கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.