Pages

Showing posts with label மழைக்காலத்துக்கு ஏற்ற உணவுகள். Show all posts
Showing posts with label மழைக்காலத்துக்கு ஏற்ற உணவுகள். Show all posts

Monday, July 21, 2014

மழைக்காலத்துக்கு ஏற்ற உணவுகள்

மழையில் நனைந்து வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் நிலவேம்பு பொடி சிறந்த நிவாரணம் தரும். வீட்டிலேயே  நிலவேம்பு பொடி வங்கி வைத்துக் கொண்டு, அதில் சிறிது தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.

மழைக்காலத்தில் நாம் உண்ணும் உணவில் இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பால் மற்றும் பால் சார்ந்த நெய், வெண்ணை, தயிர், போன்றவற்றை சாப்பிடக்கூடாது. மோர் சாப்பிடலாம். உணவில் காரம்,துவர்ப்பு, கசப்பு உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.

இரவில் துங்குவதற்கு முன் பாலில் மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து சாப்பிடுவது நல்லது.நீர் சத்து நிறைந்த பூசணி, பீர்க்கன், சுரைக்காய், வெள்ளரி, புடலை போன்ற கைகளை தவிர்ப்பது நல்லது. உணவில் மிளகு பொடியை சேர்த்து சமைப்பது நல்லது. இரவு உணவில் பச்சைப்பயறு,கேழ்வரகு, கீரை ஆகியவை சேர்க்காமல் இருப்பது நல்லது.

மழைக்காலத்தில் பழங்கள் சாப்பிடலாம். எல்லா காலத்துக்கும் ஏற்ற வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றை மற்ற பழங்களுடன் சாப்பிடுவது நல்லது.

மழைக்காலத்தில் அசைவ உணவுகளான கறி, மீன், முட்டை, சிக்கன் சாப்பிடலாம். ஆனால் அவை புதியதாக இருக்க வேண்டும். மழை சீசனில் அதிகம் பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது. சூடாக சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் பஜ்ஜி, போண்டா இவற்றுக்கு பதிலாக இட்லி, உப்புமா, தோசை என சாப்பிடலாம். குறிப்பாக நன்கு கொதிக்கவைத்து ஆறிய நீரை மட்டுமே பருக வேண்டும்.