Pages

Showing posts with label மருதாணி. Show all posts
Showing posts with label மருதாணி. Show all posts

Sunday, February 14, 2016

வெயில் காலத்தில் உச்சி முதல் பாதம் வரை பராமரிப்பு

வெயில் காலத்தில் உச்சி முதல் பாதம் வரை பராமரிப்பு


வெய்யில் காலங்களில் நம் முகம் சோர்ந்தும், எண்ணெய்ப் பசையோடும் காணப்படும். அதற்காக எல்லோரும் அழகு நிலையத்திற்கு போக முடியாது. வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே எல்லா வயதினரும் உச்சி முதல் பாதம் வரை அழகை பாதுகாக்கலாம். வெயிலில் வெளியில் செல்லும் போது சன்ஸ் கிரீம் லோஷன் உபயோகப்படுத்துங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துங்கள். 


• நம் கண்களை பாதுகாக்க தினமும் இரவில் விளகெண்ணெயை கண்ணிமையின் மேலேயும், கண்ணின் கீழ்ப் பகுதிகளில் உருளைக்கிழங்குச் சாரையும் தடவவேண்டும். அப்படித் தடவிவந்தால் காலையில் கண்கள் பளிச்சென இருக்கும். கருவளையங்கள் போக, துளசியும் புதினாவும் அரைத்து பன்னீர் (rosewater) சேர்த்துத் தடவவேண்டும். 



• உதட்டில் வெண்ணெயுடன், தேங்காய் எண்ணெயைத் தடவி வந்தால் உதடு காய்ந்து போகாமல் இருக்கும். 



• வெய்யில் காலங்களில் எண்ணெய் பசை இல்லாமல் சருமம் பளிச்சென இருக்க இதோ சில குறிப்புகள்: முதலில் பால் ஏட்டை முகத்தில் தடவி, பஞ்சு மூலம் முகத்தில் உள்ள அழுக்கை எடுக்க வேண்டும். பப்பாளி, ஆப்பிள் கலந்து முகத்துக்கு 15 நிமிடங்கள் மசாஜ் கொடுக்கவும். பிறகு துளசி, புதினா இலைகளுடன் தண்ணீரைக் கொதிக்கவைத்து முகத்துக்கு ஆவி பிடிக்கவும். (ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும்.) ஒரு முட்டைக் கரு, எலுமிச்சம்பழச் சாறு, தயிர், கடலை மாவு, எல்லாவற்றையும் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். கடைசியாக குளிர்ந்த நீரால் முகத்தைச் சுத்தப்படுத்தவும். இப்படி வாரம் இருமுறை அல்லது ஒரு முறை செய்து வந்தால், முகம் பொலிவுடன் காணப்படும். 



• தேங்காய் எண்ணெயைப் பஞ்சில் எடுத்துத் தலையில் தேய்க்கவும். (பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து பிறகு காலையில் தேங்காய் எண்ணெயில் கலந்து உச்சந்தலையில் தேய்க்கவும்.) பின் தலையை மசாஜ் செய்யவும் 15 நிமிடங்கள் ஊறிய பிறகு, மருதாணி, டீ-டிக்காஷன் இரண்டையும் தயிரில் கலந்து தலை முடிக்கு pack-ஆகப் போடவும்.(மருதாணி போடுவதால் முடியின் கலர் மாறாது. 



மருதாணி, டீ-டிகாஷன், தயிர் சேர்ந்த கலவையை இரவே ஊற வைத்துப் போட்டால்தான் முடி கலர் மாறும்.) மருதாணி ஒத்துக் கொள்ளாதவர்கள் செம்பருத்தி இலையை உபயோகப்படுத்தலாம். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், தலை முடி ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும் இருக்கும். 



• பாதம் சுத்தமாகவும், மிருதுவாகவும் இருக்க தினமும் வெதுவெதுப்பான நீரில் உப்பு, எலுமிச்சம் பழச்சாறு கலந்து, குளிக்குமுன் 20 நிமிடங்கள் பாதத்தை அதில் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த தண்ணீரீல் சுத்தப்படுத்தவும்.