Pages

Showing posts with label பாஸ்தா. Show all posts
Showing posts with label பாஸ்தா. Show all posts

Wednesday, April 1, 2015

இத்தாலியன் பாஸ்தா!!!


 pasta recipes in tamil language க்கான பட முடிவு
பாஸ்தா உடலுக்கு மிகவும் சிறந்த உணவு, இது ஒரு இத்தாலியன் வகை உணவுகளில் ஒன்று. இந்த உணவை உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் சாப்பிட்டால், நிச்சயம் குண்டாவார்கள். இத்தகைய பாஸ்தாவை எவ்வாறு செய்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும் என்பதனைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :
பாஸ்தா - 500 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தக்காளி சாறு - 4 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்

செய்முறை :
முதலில் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டு, அதில் பாஸ்தாவை போட்டு, எண்ணெய் மற்றும் சிறிது உப்பை போட்டு, நன்கு கலக்கி, தட்டைப் போட்டு மூடி, சிறிது நேரம் வேக வைத்து, வெந்துள்ளதா என்று பார்த்து, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, பிறகு குளிர்ந்த நீரால் ஒரு முறை அலசவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய், வெங்காயம், கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். 

காய்கள் அனைத்தும் ஓரளவு வெந்ததும், அதில் சிறிது உப்பை போட்டு, சிறிது நேரம் வேக வைக்கவும். பின் அதில் தக்காளி சாறு, கரம் மசாலா தூள், சீரகப் பொடி, மிளகாய் தூள், மாங்காய் பொடி, மிளகுத் தூள் மற்றும் சில்லி சாஸ் விட்டு நன்கு கிளறவும். அனைத்துப் பொருட்களும் நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் பாஸ்தாவை போட்டு, நன்கு 5 நிமிடம் கிளறி, பின் அதனை இறக்கவும்.
இப்போது சுவையான ஈஸியான பாஸ்தா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லி மற்றும் துருவிய சீஸ் போட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.