Pages

Showing posts with label பயத்தம்பருப்பு தோசை. Show all posts
Showing posts with label பயத்தம்பருப்பு தோசை. Show all posts

Tuesday, June 28, 2016

பயத்தம்பருப்பு தோசை

 பயத்தம்பருப்பு தோசை

தேவையான பொருட்கள்: 

பயத்தம்பருப்பு 3 கப்
புழுங்கலரிசி 3/4 கப்
பச்சைமிளகாய் 5
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
கொத்தமல்லித்தழை 1 கப் (ஆய்ந்தது)
உப்பு,எண்ணைய் தேவையானது
தயார் செய்யும் முறை: 
பயத்தம்பருப்பு அரிசி இரண்டையும் நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்.  ஊறவைத்த அரிசி,பருப்பை வடிகட்டி அதனுடன் பச்சைமிளக்காய்,சீரகம், இஞ்சி, கொத்தமல்லித்தழை, தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அரைக்கவேண்டும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் காய்ந்ததும் மாவை ஒரு கரண்டி ஊற்றிமெல்லிசாக வார்க்கவேண்டும். இறுபுறமும் எண்ணைய் விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.இந்த தோசையை அரைத்த உடனே சாப்பிடலாம். தக்காளி சட்னி, வெங்காய சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.