இவைகளில் எது உங்கள் சருமத்திற்கு ஒத்து வரும் என்று பார்த்து ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள்.
1. பாதாம் எண்ணெய் : உலர்ந்த சருமத்திற்கு பாதாம் எண்ணெய் தேய்த்து வந்தால் நல்லது. பருக்கள் குழி அடையாளங்களையும் பாதாம் ஆயில் நாளடைவில் நீக்கிவிடும். ஆயில் கிடைக்காவிடில் பாதாமின் தோலுடன் 3 - 5 எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் தேய்க்கலாம்.
2. பச்சை நிற ஆப்பிள் : பச்சை நிற ஆப்பிளின் சாறு தோல் சுருக்கம், அரிப்பு, வெடிப்பு அனைத்திற்கும் மிக நல்லது.
3. தேன் : தேனில் பால், தயிர், அரைத்த எள்ளு எல்லாம் சரிசமமாக கலந்து தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் ஆகும்.
4. கடலை எண்ணெய் : 1 தேக்கரண்டி கடலெண்ணெயில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வந்தால் பரு, கரும்புள்ளிகள் வரவே வராது.
5. மஞ்சள் கண்களுக்கு கீழே கருவட்டத்தை நீக்க மஞ்சளில் அன்னாசி சாறு சேர்த்து தேய்த்து வரவும்.