தண்ணீரில் அதிகம் வேலை செய்பவர்களுக்கும், கால்சியம் குறைவாக உள்ளவர்களுக்கும் நகங்கள் அடிக்கடி உடையும். சோப்பிலிருக்கும் ரசாயனத்தின் பவர் தாங்காமல் சிலருக்கு நகங்கள் அவ்வப்போது உடையும். அடிக்கடி நகம் உடையும் பிரச்சனைகள் உள்ளவர்கள் ஆலிவ் ஆயில், அல்லது பாலேடு சேர்த்து நகத்தில் மைல்டாக மசாஜ் செய்ய வேண்டும்.
கடினமான வேலைகளை செய்யும்போது கைகளுக்கு க்ளவுஸ் வாங்கிப் பயன்படுத்தினால் நகங்கள் உடைபடுவது குறையும்.
நகங்களில் கொஞ்சமாக நெயில் பாலிஷ் ஒட்டிக் கொண்டு இருந்தால் அதை சுரண்டி எடுக்காமல் விட்டமின் 'இ' உள்ள நெயில்பாலிஷ் ரிமூவர் பயன்படுத்தி எடுங்கள்.
உள்ளங்கைகள் சாப்ட்டாக இருக்க சர்க்கரையில் தண்ணீர் தெளித்து
உள்ளங்கையில் நன்கு தேய்க்கவும். இரண்டு நாளுக்கு ஒருமுறை இப்படி செய்து வந்தால் உள்ளங்கைகள் 'பூ' போல மென்மையாக இருக்கும்.
வெதுவெதுப்பான சுடுநீரில் சிறிது உப்பு போட்டு நகங்கள் அந்த நீரில் நன்றாக மூழ்குமாறு கொஞ்ச நேரம் வைத்தால் நகங்கள் உடையாது.
அடிக்கடி நெயில் பாலிஷ் உபயோகப்படுத்துவதால், நகங்களின் இடுக்கில் அழுக்கு சேராமல் நகங்களை பாதுகாக்க முடியும்.
நகங்களை நன்கு கழுவி சுத்தப்படுத்தி வைத்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நகங்கள் மூலம் பரவும் தொற்றுக்களை தடுக்க முடியும்.
நகங்களின் மூலம் நமது ஆரோக்கியத்தையும் கண்டுகொள்ள முடியும். நமது உடலில் மஞ்சள்காமாலை நோய் இருந்தால் நகங்கள் மஞ்சளாக மாறிவிடும்.
உடலில் ரத்தம் குறைவாக இருந்தால் நகங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். நகங்கள் ரோஸ் நிறத்தில் இருந்தால் நகங்களும், உடலும் ஆரோக்கியமாக உள்ளதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமா?
எனவே மேலே சொன்ன இந்த முறைகளைப் பயன்படுத்தி நகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.