Pages

Showing posts with label கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை கண்டிஷனர். Show all posts
Showing posts with label கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை கண்டிஷனர். Show all posts

Wednesday, October 19, 2016

கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை கண்டிஷனர்


முடியின் அடர்த்தியை அதிகரிக்க, சுருள்களை குறைக்க, சொரசொரப்பை குறைக்க, கூந்தல் உதிர்வை தடுக்க முட்டையை பயன்படுத்துங்கள். மலிவாக விற்கும் முட்டையின் உதவியை கொண்டு உங்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.

முட்டையை கொண்டு செய்யப்படும் பேக், ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பற்றி இப்போது பார்க்கலாமா?

திடமான தலைமுடிக்கு…

தேவையான பொருட்கள்: – முட்டைகள் – எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ்

எண்ணெய் தயாரிக்கும் முறை:

* இரண்டு முட்டைகளை எடுத்து அதிலிருந்து மஞ்சள் கருவை தனியாக எடுங்கள். பின் நுரை வரும் வரை மஞ்சள் கருவை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 டீஸ்பூன் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்குங்கள். கலவை அடர்த்தியாக வருவதற்கு அதனை 3-4 நிமிடங்கள் வரை நன்றாக அடிக்கவும். இதோ, உங்கள் தலை முடிக்கான மாஸ்க் தயார்.

* இந்த கலவையை தலை முடியில் தடவுவதற்கு முன்பாக, தலை முடியை மிதமான ஷாம்புவை கொண்டு நன்றாக அலசிக் கொள்ளுங்கள். தலை முடி ஈரமாக இருக்கும் போது, இந்த கலவையை முடிகளின் வேர்கள், தலைச் சருமம் மற்றும் நுனிகளில் படும்படி தடவுங்கள். இப்போது தலையில் ஷவர் கேப் அணிந்து கொண்டு 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள்.

அதன் பின் சாதாரண ஷாம்புவை கொண்டு தலையை அலசி, தட்டிக் கொடுங்கள். முட்டையில் உள்ள புரதம் உங்கள் முடியை திடமாகவும் மென்மையாகவும் மாற்ற உதவும். அதே போல் ஆலிவ் எண்ணெய் உங்கள் முடிக்கு நீர்ச்சத்தை அளித்து ஒரு சிறந்த கண்டிஷனராக செயல்படும்.