முகத்தில் சுருக்கங்கள் தோன்றுகின்றதா முகம் வாட்டமா இருந்த மாதிரி
இருக்குதா! கவலைய விடுங்க நம்ம கிட்ட இருக்குற பொருளை வைத்தே
குணப்படுத்திடலாம்.
வெங்காயம் சமையலுக்குதான் பயன்படும் என்றில்லை! தற்போது அனைத்து வகையான
உபயோகங்களுக்கும் பயன் படுகிறது. வெங்காயம் மருத்துவ குணம் நிறைந்தது. அதே
சமயம் சிறந்த கிருமி நாசினியாகும்.
நம் முகத்தில் காணப்படும் வடுக்ககளையும், மேடு பள்ளங்களையும்
நீக்குவதற்கு வெங்காயத்தை சாறு எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து
முகம் கழுவ வேண்டும்.
அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தழும்புகள் படிப்படியாக மறைவதை காணலாம். மேலும் முகத்தில் உள்ள கரு வண்ண புள்ளிகளும் மறையும்.
வெங்காயத்தை நன்கு மசித்து அதனுடன் தேன் விட்டு கலந்து முகத்தில் போட்டுக் கொண்டு வந்தால் முகச்சுருக்கம் குறைந்து விடும்.
கண்கள் சோர்வாக இருந்தால் குளிர்ந்த நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து
கண்களை விழித்து அலம்பினால் சோர்வு போய் புத்துணர்ச்சி கிட்டும்.
ஆரோக்கியமாக வாழவும் புத்தெம்புடன் காணவும் வெங்காயத்தை பயன்படுத்தலாம்.