இருதயத்தையும் வலுப்படுத்தும் ருத்ர முத்திரை
செய்முறை :
படத்தில் உள்ளதைப் போல பெருவிரல் நுனி, சுட்டு விரல் நுனி மற்றும் மோதிரவிரல் நுனி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து, நடுவிரல், சுண்டு விரல் நேராக வைத்திருத்தல் வேண்டும். இதுவே ருத்ர முத்திரையாகும். இதனை தினமும் பதினைந்து நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பயன்கள் :
உடல் வலிமை குன்றியவர்களுக்கு உடல்வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு, இருதயத்தையும் வலுப்படுத்தும் என்கிறார். பொதுவில் முத்திரைகளை யாரும் செய்யலாம், இதற்கென எந்த விதமான முன் தயாரிப்புகளும் தேவையில்லை.
அமைதியான சூழலில் பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது இன்னமும் சிறப்பு. முத்திரைகளின் வகைக்கேற்ப குறைந்தது பத்து நிமிடம் முதல் முக்கால் மணி நேரம் வரை செய்ய வேண்டும். முத்திரைகளை தொடர்ந்து செய்து வருவதனால் மட்டுமே தேவையான பலன் கிட்டும். தகுந்த குருவின் மேற்பார்வையில் இவற்றை பழகி, பயன்படுத்துவது சிறப்பு.