Pages

Showing posts with label அரசு வேலை. Show all posts
Showing posts with label அரசு வேலை. Show all posts

Wednesday, February 12, 2014

அரசு வேலை பெற தயாராவது எப்படி?

அரசு வேலை
ரயில்வே, யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., மாநில தேர்வாணைய தேர்வுகள் என போட்டித் தேர்வுகள் நிறைய உள்ளன. லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் இந்த தேர்வுகளில் உங்களாலும் வெற்றி பெற முடியும்.

கல்லூரி முடித்ததும் மேலே படித்தாலும் சரி, வேலையில் இருந்தாலும் சரி, போட்டி தேர்வுகளைக் கண்டு பயப்படத் தேவை இல்லை. விடாமல் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். இதற்கென உள்ள கோச்சிங் கிளாசில் சேர்ந்தால் நல்லது. அங்கு கிடைக்கும் மெட்டீரியல்ஸ், டிப்ஸ்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கோச்சிங் செல்லாதவர்கள் தினமும் ஆறு மணி நேரம் தேர்வு தயாரிப்புக்கு ஒதுக்குவது சிறந்தது. அதிகாலை, மாலை, இரவு என நேரத்தை பிரித்துக் கொண்டு திட்டமிடுவது சிறந்தது.

பெரும்பாலும் அப்டிட்யுட், பொது அறிவு, நடப்பு நிகழ்வு ஆகியவற்றில் இருந்தே அதிகமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. இத்தகைய கேள்வி-பதில் புத்தகங்களை வாங்கி பயிற்சி செய்யலாம். சம்பத்தப்பட்ட தேர்வானையங்களில் பழைய கேள்வித்தாள்களையும் வாங்கிப் படிக்கலாம்.

நடப்பு நிகழ்வுகளுக்கு செய்தித்தாள்களைப் படிப்பது மிக முக்கியம். எல்லா முன்னணி நாளிதழ்களையும் தினமும் படிப்பது நல்லது. ஏனெனில், சில சமயங்களில் அரசின் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் சில பத்திரிகைகளில் மட்டும் வெளியாகலாம். தினமும் செய்தித்தாள்களி படிக்கும்போது முக்கியமான நிகழ்வுகளை குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது. தவிர போட்டித் தேர்வுக்கென்றே சில பத்திரிகைகள் வெளியாகின்றன. அவற்றையும் படித்து பயன் பெறலாம். அவற்றில் வரும் மாடல் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது அவசியம்.

அரசு வேலையில் போட்டிகள் தவிர்க்க முடியாது. தொடர்ச்சியான பயிற்சி இருந்தால், குறுகிய காலத்திலேயே வேலை கிடைத்து விடும்.