வாசனை நிரம்பிய இலைகள் மலர்களை விரும்பாதவர்கள் யாரேனும் உண்டா? வாசம் நாசியை நெருங்கும் வரை, ஆயிரம் கருத்துக்கள் இருந்தாலும், நாசியில் ஏறி சுவாசத்தில் வாசனை கலந்த பின், எதிர்ப்புக் காற்று கூட வராது, மனிதர்களுக்கு இயற்கையின் அன்பளிப்பே, நறுமணம்!
நறுமண மலர்கள், இலைகளைப் பார்த்திருப்போம், பழங்களைக்கூட பார்த்திருப்போம், ஒரு செடியே நறுமணமாக இருப்பதைப் பார்த்திருக்கிறோமா? தூரத்தில் இருக்கும்போதே, வாசனை மனதை மயக்கும். பூக்களையும் மருந்தாக பயன்படுத்துவது நம்முடைய பழக்கவழக்கங்களில் இருந்து வருகிறது.. அதில் ஒன்றுதான் இந்த மரிக்கொழுந்து.
மரிக்கொழுந்து இது பூக்கடைகளில் கிடைக்கும். ஆனால், அதை நாம் ஒரு பொருட்டாகவே நினைப்பது இல்லை. இதில் என்ன இருக்கு வெறும் வாசனைதானே என நாம் கடந்து வந்து விடுவோம். ஆனால் வாசம் மிக்க மரிக்கொழுந்தில் மகத்துவம் மிக்க மருத்துவம் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? மரிகொழுந்தின் மருத்துவப் பயன்கள் , உடல் , சருமம் மற்றும் முடி சார்ந்த பிரச்சினைகளுக்கு மரிக்கொழுந்தை எப்படிப் பயன்படுத்துவது அப்படின்னுதான் இந்தப் பதிவுல நம்ம பார்க்கப்போறோம் .
ஆன்மீகத்தில் இதைத் தவனம் என்றும் சொல்லுவார்கள். இதன் வாசமும் நிறமும் வசீகரத் தன்மை கொண்டது. தினம்தோறும் இந்த மரிக்கொழுந்து உங்களுக்கு கிடைத்தால் அதை வாங்கி சுவாமிக்கு சமர்ப்பணம் செய்து வழிபாடு செய்தால் உங்கள் பூஜைக்கு பலன் இரட்டிப்பாக கிடைக்கும். இறை சக்தியை வசியம் செய்ய கூடிய சக்தியும் இந்த மரிக்கொழுந்துக்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. மரிக்கொழுந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் நீங்கிவிடும்.
புதன் கிழமை மாலை, பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை சாத்தி புனுகுபூசி பாசிப்பருப்புப் பொடி கலந்த அன்னம், பாசிப்பருப்புப் பாயசம் படையல் செய்ய மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுவர். கிரகிப்புத்திறன் அதிகரித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவர். புதன்கிழமை காலை 10.30- 12க்குள் பைரவருக்குச் சந்தனக்காப்பு செய்து மரிக்கொழுந்து மாலை சூட்டி, பாசிப்பயறு பாயாசம், கொய்யாப்பழம், பாசிப்பருப்புப் பொடி சாதம் படைக்க வியாபாரத்தில் அமோகவளர்ச்சி உண்டாகும்.
தனியாக இருக்கும் முருகக் கடவுளுக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்; மரிக்கொழுந்து - தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும்.
தம்பதிகள் ஒற்றுமைக்கு :மனோரஞ்சிதம், மரிக்கொழுந்து இவைகளினால் ஈஸ்வரன், விநாயகரை வழிபட தம்பதிகளுக்கு ஒற்றுமை கிடைக்கும்.
ஆன்மீக மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த மரிக்கொழுந்து, கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு இலைகள், தண்டுகள் மூலம், அடர்த்தியாக வளரக்கூடியவை.. நிறைய கிளைகளுடன் காணப்படும்.. சாம்பல் நிறம் கலந்த பச்சை வண்ண இலைகளை கொண்டது.
அவை, இருக்கும் இடங்கள் எல்லாம், நறுமணத்தைப் பரப்பும்! நமது தேசத்தில் மிக அதிக அளவில் பயிரிடப்படும் மரிக்கொழுந்து, வாசனை மலர் மாலைகளிலும், மலர்ப் பூங்கொத்துக்களிலும் சேர்க்கப்படுகிறது. வாசனை எண்ணை தயாரிப்பிலும், வாசனை மலர் மருத்துவத்திலும், அறை நறுமண மூட்டியாகவும், பயன்படுகிறது.
அழகு சாதன பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. மரிக்கொழுந்து, வண்டல் நிலம், கரிசல் நிலம், மற்றும் செம்மண் நிலங்களில் அதிக அளவில் வளரும். மிதமான மழை மற்றும் சூரிய ஒளி மரிக்கொழுந்து செடிகளை நன்கு வளர வைக்கும் தன்மை உள்ளவை. அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி, உரம் மற்றும் மருந்து தெளிக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே, நன்கு செழித்து வளரும் தன்மை மிக்கது.
வாசனை பூக்கள்: வெறும் வாசனைக்காக வண்ண மலர்களில் வைத்து கட்டப்படும் அலங்கார பூ மட்டுமில்லை.. நோய்களை ஓட ஓட விரட்டும் மகத்துவம் நிறைந்தது இந்த மரிக்கொழுந்து.
மன அழுத்தத்தை போக்கும் : மன நிலை சார்ந்த மன உளைச்சல், மன வேதனை பாதிப்புகளை சரி செய்து, மன நிலையை சீராக்கும் ஆற்றல் மிக்கது, மரிக்கொழுந்து.
உடல் வீக்கங்கள் கட்டிகள் தரும் வலியைப் போக்கி, அவற்றை சுருங்க வைக்கிறது. மன நல பாதிப்புகளுக்கு ஆற்றல்மிக்க, நிவாரணமாகத் திகழ்கிறது.
மரிக்கொழுந்து இலைகளை பறித்து சுத்தம் செய்து, அரைத்து விழுதுபோல எடுத்து கொண்டு, ஒரு டம்பர் நீரில் கலந்து சிறிது நேரம் ஊறவைத்து குடித்தால், வயிற்று வலி பறந்தோடிடும்.. சருமக்கோளாறுகள் இருந்தாலும், அதனை இந்த மூலிகை விழுது நீர் சரிசெய்யும்.. குடலை சுத்தம் செய்வதுடன், நீர்க்கடுப்பு பாதிப்புகளையும் தணிக்கக்கூடியது.
தலைவலி அவதி: தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கும் இந்த விழுது உபயோகமாகும்.. ஒரு வாணலியில் நல்லெண்ணை விட்டு, அதில், இந்த அரைத்த விழுதையும், சிறிது சுக்குத்தூளையும் கலந்து ஆறவிட வேண்டும். பிறகு இதை எடுத்து, நெற்றியில் பற்று போல தடவினால், தலைவலி நீங்கும்.
கை கால் மூட்டுவலி இருப்பவர்களும் இந்த விழுதை பயன்படுத்தலாம், இந்த மரிக்கொழுந்து எண்ணை விழுதை தடவினால் நிவாரணம் கிடைக்கும். சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்களும் இந்த விழுதை பயன்படுத்தலாம். வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய்யை ஊற்றி, இந்த விழுதை அதில் கொட்டி, தைலம் போல வரும்வரை காய்ச்ச வேண்டும். பிறகு ஆறவைத்து பாதிப்புள்ள இடங்களில் தடவிவந்தால், சொரியாசிஸ் போன்ற தோல் வியாதிகளும் நீங்கும்.
கஷாயம்: மரிக்கொழுந்தை கஷாயம் போல காய்ச்சி குடித்து வந்தால், புற்றுநோய்களை நம்மை அண்டவிடாது.. செம்பட்டையான தலைமுடி உள்ளவர்கள், மரிக்கொழுந்து இலைகளை, நிலாவாரை இலைகளுடன் கலந்து அரைத்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால், செம்பட்டை நீங்கி, கருப்பு முடிகள் வளர ஆரம்பிக்கும். மாலை, கதம்பம் இவற்றில் வாசனைக்காக மரிக்கொழுந்து சேர்க்கப்படுகிறது.
அழகுசாதன பொருட்களிலும், வாசனை திரவியங்களிலும், மரிக்கொழுந்துவுக்கு தனி உடம் உண்டு.. இந்த மரிக்கொழுந்துவை வாசனை எண்ணை தயாரிப்பிலும், வாசனை மலர் மருத்துவத்திலும், பயன்படுத்துகிறார்கள்.
அதேபோல, சரும பிரச்சனைகளுக்கு முதல் தீர்வாக இருப்பது இந்த மரிக்கொழுந்துதான்.. சருமத்தில் ஏற்படும் தொற்றுகள், அரிப்புகள், பூஞ்ஜை தொற்றுகள், வீக்கங்கள், கட்டிகள், புண்கள் இருந்தால், அவைகள் அனைத்தையுமே அடியோடு விரட்டும் சக்தி இந்த மரிக்கொழுந்துவுக்கு உண்டு..
தூக்கமின்மை: தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், ஒரு கொத்து, மரிக்கொழுந்து இலைகளை தண்டுடன் சேர்த்து தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால், நிவாரணம் கிடைக்கும். வாரம் இரு முறை, மரிக்கொழுந்துகளை மாற்றி, இது போல சில வாரங்கள் செய்துவர, மன நல பாதிப்புகளும் குணமாகி, பின்னர், மரிக்கொழுந்து இல்லாமலேயே, அமைதியான உறக்கம், இயல்பாக வரும்.
உளைச்சலையும், மன வேதனையும் போக்கி மனதை அமைதிப்படுத்துகிறது.. மன நிலையை சீராக்குகிறது இந்த மரிக்கொழுந்து. சிறுநீரக கோளாறுகளை தீர்க்கிறது.
"மரிக்கொழுந்து எண்ணெய் தன்மையை தன்னுள் அடக்கிவைத்திருக்கும் ஓர் இயற்கை மூலிகை.
தலையின் ஸ்கால்ப் முதல் பாதம் வரை, சருமத்தை மென்மையாக்கும் தன்மை மரிக்கொழுந்துக்கு உண்டு. எனவே, மரிக்கொழுந்தை எண்ணெயாகக் காய்ச்சி ஸ்கால்ப், கேசம் முதல் உடலிலும் தடவிக்கொள்ளலாம். இது உலர்வான கேசத்தை மென்மையாக்கும், ஸ்கால்ப்பை கண்டிஷன் செய்து மென்மையாக்கி முடியை நெருக்கமாக வளர வைக்கும்.
கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் 100 கிராம் குச்சிகள் நீக்கப்பட்ட ஃபிரெஷ்ஷான மரிக்கொழுந்து இலைகளைப் போட்டுக் காய்ச்சவும். கலவை தைலப் பதத்துக்கு வந்தவுடன் அதில் ஒரு டீஸ்பூன் வெட்டிவேரைச் சேர்த்து அடுப்பை அணைத்து அப்படியே மூடிவிடவும் (இதில் வெட்டிவேர் ஒரு பிரிசர்வேட்டிவ்வாகச் செயல்படும்). இந்த எண்ணெயைத் தலைக்கு மட்டுமல்லாது பாதங்கள் மற்றும் நகங்களில் தொடர்ந்து தடவிவரும்போது, அந்தப் பகுதிகளில் உள்ள சொரசொரப்புத் தன்மை மறைந்து மென்மையாகும்; நகங்கள் உடையாமல் இருக்கும். பாத வெடிப்புக்கும் இது நிவாரணம் தரும். வாரம் இருமுறை, இந்த எண்ணெயைச் சிறிது சூடாக்கி தலை மற்றும் உடல் முழுக்கத் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்தும் குளிக்கலாம்.
முதல்நாள் இரவு ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பை ஊறவைக்கவும். மறுநாள் காலையில் இதனுடன் ஒரு டீஸ்பூன் பால் மற்றும் இரண்டு டீஸ்பூன் மரிக்கொழுந்து இலைகளைச் சேர்த்து விழுதாக அரைக்கவும். இதை முகத்தில் பேக்காகப் போட்டுவந்தால் மென்மையான மாசுமருவற்ற சருமம் கிடைக்கும்.
இந்தியாவிலேயே பெங்களூரில் இந்த மரிக்கொழுந்து நன்றாக விளைகிறது. நம்முடைய மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளிலும் மரிக்கொழுந்து பயிரிடப்படுகிறது.. வெளிநாடுகளில் 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம்.
அழகுசாதன பொருட்கள்: மரிக்கொழுந்துவின் மகத்துவம் வெளிநாடுகளில் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான், இங்கிருந்து ஏராளமான மரிக்கொழுந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.. இவைகளை அழகுசாதன பொருட்களில் அவர்கள், நம்மைவிட பலவகைகளில் அதிகமாகவே பயன்படுத்தி கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment