சிவந்த கவர்ச்சியான நிறமும், மிகுந்த இனிப்பு சுவையும் கொண்டவை பிளம்ஸ்
பழங்கள். ஏப்ரல், ஜூன் மாதங்களில் கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை
பிரதேசங்களில் அதிகம் விளைகிறது. சிவப்பு நிற பழங்கள் அனைத்தும் அதிக சத்து
நிறைந்தவை.
ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்றவை சிவப்பு நிற பழங்கள் என்பதால், அதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. இவை ரத்தத்தை விருத்தி செய்யும்; ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும். ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பு பொருட்களை கரைக்கும்.
சிறுநீரக கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். மன அழுத்தத்தை போக்கும்; டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும். கண் பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிற பழங்களுக்கு உண்டு. எலும்பு மஜ்ஜைகளை பலப்படுத்துகிறது. இதயத்துக்கு சிறந்த டானிக்காக, சிவப்பு நிற பழங்கள் விளங்குகின்றன.
பிளம்ஸ் பழங்கள் குறைந்த ஆற்றல் தரக்கூடிய. 100 கிராம் பழத்தில், 46 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. பூரிதமாகாத கொழுப்புகள் இதில் இல்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்கள் உள்ளன. பழத்தில் உள்ள சார்பிடால், இசாதின் போன்ற நார்ப்பொருட்கள், ஜீரண மண்டலத்தை நன்கு செயல்பட வைக்கும்.
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும். பிளம்ஸ் பழத்தில், வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. உடலை நோய்த் தொற்றுகளில் இருந்து காப்பதில், "வைட்டமின் சி' யின் பங்கு முக்கியமானது. "வைட்டமின் ஏ' மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள், பிளம்ஸ் பழத்தில் அதிக அளவில் உள்ளது. வைட்டமின் ஏ, பார்வைத் திறனுக்கு மிக அவசியமானது. சளிச்சவ்வை ஆரோக்கியமாக இயங்கச் செய்து சளித் தொல்லையை தவிர்க்கச் செய்யும். நுரையீரல் மற்றும் வாய்ப்புற்று நோய்களில் இருந்து காக்கும் ஆற்றலும் வைட்டமின் ஏ-வுக்கு உள்ளது.
கண்களின் ரெட்டினா பகுதியை புற ஊதாக் கதிர்களின் தாக்குதலில் இருந்து காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொட்டாசியம், புளோரைடு, இரும்பு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் மிகுதியாக உள்ளன. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு, இரும்புத் தாது மிக அவசியம். பொட்டாசியம், உடலை பளபளப்பு தன்மையுடன் வைப்பதிலும், ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் பங்கெடுக்கிறது.
பி -காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான நியாசின், வைட்டமின் பி6 போன்றவை உள்ளன. கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சிதை மாற்றத்தில், இந்த வைட்டமின்கள் துணைக் காரணியாக பங்காற்றுகிறது. பிளம்ஸ் பழத்தில் சிறிதளவு வைட்டமின் கே உள்ளது. இது ரத்தம் உறைதலில் உதவுவதுடன், அல்சீமர் போன்ற பாதிப்புகளை குறைப்பதிலும் பயன்படுகிறது.
No comments:
Post a Comment