Pages

Tuesday, June 28, 2016

பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களால் ஆபத்து

 processed foods க்கான பட முடிவு
பெரும்பாலும் உறைய வைக்கப்பட்டிருக்கும் உணவுகளில் ஸ்டார்ச் எனும் மாவு பொருள் உள் சேர்க்கப் பட்டிருக்கும். இதனால் உடலில் உள்ள இயற்கை சர்க்கரை அளவு அதிகரிக்கப்படுகிறது. இது நீரழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்த காரணமாய் இருக்கின்றது. உறைய வைக்கப்பட்டிருக்கும் உணவுகளில் ஹைட்ரஜனேற்ற கொழுப்பு இருக்கிறது.

இது உடலுக்கு தீங்கான கொழுப்பு சத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் காரணமாக உங்கள் இதயத்தில் அடைப்பு ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. உறைய வைக்கப்பட்டிருக்கும் உணவுகள் சீக்கிரமாய் கெட்டு போகாமல் இருப்பதற்காக அதிக உப்பும், இனிப்பும் சேர்க்கப் பட்டிருக்கும். இதனால் ரத்த கொதிப்பின் அளவு அதிகரிக்கும். இது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

பதப்படுத்தப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருக்கும் இறைச்சி உணவுகளை பயன்படுத்துவதால் கணைய புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கெட்டுபோகாமல் நீண்ட நாட்கள் இருக்க பல வகையான ரசாயனங்கள் உணவோடு சேர்க்கப் படுகிறது. இதன் காரணமாக வாந்தி, நெஞ்சுவலி, தலைவலி, மயக்கம், சுவாச பிரச்னை போன்றவை ஏற்படுகிறது.

No comments: