பீட்ரூட்டில் உள்ள கார்போஹைடிரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் எளிதில் கரைந்து ஜீரணமாகிவிடுகிறது. ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் 87.7 சதவீதம் தண்ணீர், கொழுப்பு 0.1 சதவீதம், தாதுக்கள் 0.3 சதவீதம், நார்ச்சத்து 0.9 சதவீதம், கார்போஹைடிரேட் 8.8 சதவீதம் இருக்கிறது. இத்துடன் கால்சியம், பொட்டாசியம், சோடியம்,சல்பர், அயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன. இதில் உள்ள இரும்புச்சத்து உடலில் புதியதாக ரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. ரத்தம் குறைவாக உள்ளவர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியாகும். கல்லிரல் குறைபாடுகளுக்கும் , பித்தத்தினால் ஏற்படும் வந்திக்கும் பீட்ரூட் சிறந்த டானிக்.
பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகளைப்போல் சமைத்துசாப்பிட்டுவந்தால் அல்சர், மற்றும் மஞ்சள்காமாலை போன்ற நோய்களும் குணமாகும். நீண்ட நாட்களாக மலச்சிக்கலால் சிரமப்படுபவர்களும், மூல நோயால் பாதிக்கப்படுபவர்களும் பீட்ரூட் சாறை நீருடன் கலந்து இஇரவு படுக்கப் போகும் முன் அரை டம்ளர் பருகி வந்தால் பலன் கிடைக்கும். கிட்னி கற்கள் உருவாவதையும் தடுக்கும்.
சருமத்தில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு மடங்கு பீட்ரூட் சாருடன் ஒரு மடங்கு தண்ணீர் கலந்து தடவினால் விரைவில் குணமாகும். புற்று நோய் உள்ளவர்கள் தினமும் பீட்ரூட் ஜூஸ் ஒரு டம்ளர் அருந்தி வந்தால் மேலும் புற்று நோய் பரவாமல் தடுக்க முடியும். புற்று நோயின் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தும் வல்லமை படைத்தது பீட்ரூட்.
- பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.
- தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறை தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் தடுக்க முடியும்.
- பீட்ரூட் கஷாயம் மூல நோயை குணப்படுத்தும்.
- பீட்ரூட் சாருடன் வெள்ளரி சாறு கலந்து சாப்பிட்டால் சிறுநீரகம் சுத்திகரிக்கப்படும்.
- குழந்தைகளும் இதன் இனிப்பு சுவையை விரும்புவர்.
No comments:
Post a Comment