பெண்கள் பலரும் தங்களின் சருமத்தை வெள்ளையாக்க கடைகளில் விற்கப்படும் கண்ட ஃபேர்னஸ் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். அதிலும் விலை குறைவாக உள்ள ஃபேர்னஸ் க்ரீம்கள் தான் சருமத்திற்கு கேடு விளைவிக்கும் என்று, பலரும் விலை அதிகம் உள்ள ஃபேர்னஸ் க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். ஃபேர்னஸ் க்ரீம்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக பக்க விளைவுகள் ஏற்படும். அவை என்னவென்று பார்க்கலாம்.
தொடர்ச்சியான ஃபேர்னஸ் க்ரீம் பயன்பாட்டினால், சருமம் மிகவும் சென்சிடிவ்வாகி விடும். பின் வெயிலில் சென்றால் கூட, சருமத்தில் எரிச்சல், அரிப்பு, சில நேரங்களில் கொப்புளங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சில ஃபேர்னஸ் க்ரீம்கள் சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. இருப்பினும் அதிக பணம் கொடுத்து வாங்கிவிட்டோம் என்று சிலர் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்தினால், சருமத்தில் பருக்கள் அதிகரித்து முகத்தின் அழகை கெடுத்து விடும். மேலும் சருமத்தின் நெகிழ்வுத்தன்மை தளர்ந்து, விரைவில் சுருக்கங்கள் விழுந்து, முதுமைத் தோற்றத்தைப் தந்து விடும்.
சில ஃபேர்னஸ் க்ரீம்களில் உள்ள கெமிக்கல்களால் சருமத்தின் நிறம் கருமையாகக்கூடும். எனவே எந்த ஒரு ஃபேர்னஸ் க்ரீம்மையும் பரிசோதித்துப் பார்க்காமல் பயன்படுத்த வேண்டாம்.
No comments:
Post a Comment