உடலின் அனைத்து பாகங்களைப் போல் மூளை இயங்குவதற்கும் சக்தி தேவை. ‘குளுக்கோஸ்’ எனப்படும் பிரிவே மூளைக்குத் தேவையான முக்கிய சக்தி. முழு தானிய உணவுகளிலிருந்து கிடைக்கும் சக்தி அதிக குளுக்கோஸ் இல்லாமல் அளவான முறையில் மூளைக்குத் தேவையான சக்தியை அளிக்கும்.
* மீன் உணவு மூளைக்கு சிறந்த உணவு. அசைவ உணவுக்காரர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம். இதிலுள்ள ஓமேகா 3 மூளைக்கு மிகவும் தேவையான ஒன்று.
* தக்காளியிலுள்ள லைகோபன் எனும் பொருள் மூளையின் திசுக்களை வெகுவாக காக்கின்றது. எனவே தக்காளியை உணவில் நன்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.
* பி காம்ப்ளக்ஸ் மற்றும் இதர வைட்டமின்களை மருத்துவர் உதவியோடு அவசியம் எடுத்துக் கொள்ளுங்கள்.
* இரண்டு டேபிஸ் ஸ்பூன் அளவு பூசணிக்காய் விதைகளை தினமும் எடுத்துக் கொள்வது மூளைக்கு அவசியமான ‘ஸிங்க்’ நன்றாக கிடைக்கின்றது. இது மூளையின் சிந்திக்கும் திறனை நன்கு தூண்டுகின்றது.
* ப்ரோகோலி எனப்படும் பச்சை காலிப்ளவர் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதிலுள்ள வைட்டமின் கே மூளையின் கவனத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.
* கொட்டைகள், கீரை வகைகள், பச்சை காய்கறிகள், தீட்டாத அரிசி இவை மூளைக்கு சிறந்த உணவாகும். வைட்டமின் ஈ சத்து இவைகளிலிருந்து நிறைய கிடைக்கின்றது.
No comments:
Post a Comment