Pages

Sunday, August 30, 2015

யோகா செய்தால் உடல் எடை குறையுமா?


யோகா செய்தால் உடல் எடை குறையுமா?

நீங்கள் யோகா செய்யும் போது அதிகப்படியான எடை தானாகவே கண்டிப்பாக குறைந்துவிடும். யோகா ஒரு உடற்பயிற்சியாக மட்டும் செயல்படுவதில்லை, அது உங்கள் அமைப்பிற்கு ஒரு புத்துணர்வு ஊட்டி, நீங்கள் அதிகமாக சாப்பிடும் இருக்கும் ஒரு விழிப்பினை உங்களுக்குள் கொண்டுவருகிறது. 


மற்ற உடற்பபயிற்சிகளையோ அல்லது உணவுத் திட்டங்களையோ நீங்கள் கடைப்பிடித்தால், எப்போதும் உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சிப்பீர்கள். ஆனால் யோகப்பயிற்சிகள் செய்து வரும்போது உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. நீங்கள் பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் போதும், நீங்கள் அதிகமாக உண்ணாத அளவு உங்கள் அமைப்புகளை யோகா கவனித்துக்கொள்ளும். 



இது தான் யோகாவில் மிகப்பெரிய வித்தியாசமும் நன்மையும். கிரியாக்களை செய்யும் போது அதிகப்படியான உணவு சாப்பிட்டாலும் எடை கூடாமல் இருப்பதை காண்பீர்கள் அல்லது உங்கள் எடை குறையவும் கூடும். அல்லது உங்கள் சாப்பாடு குறைந்தாலும் எடை இழக்க மாட்டீர்கள். உணவு உருமாறும் விதம் மாறி விடுவதால் இப்படி ஆகிறது. 



உடலைத் தாண்டி உள்ளுக்குள் இருக்கும் பரிணாமத்தை உணர வைப்பதே யோகாவின் நோக்கம். அந்த பரிணாமம் உயிர்ப்புடன் இருக்கும் போது தான் இந்த பிரபஞ்சம் எண்ணிலடங்கா வழிகளில் மெதுவாக உங்களுக்காக திறக்கத் தொடங்கும். 



நீங்கள் உடலைத் தாண்டிய‌ உள்ளுக்குள் இருக்கும் பரிணாமத்தை உணரத் துவங்கிவிட்டால், பிறகு இவை எல்லாம் இருக்கின்றனவா என்று நீங்கள் கற்பணை செய்து பார்த்திராத விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடைமுறையில் சாத்தியப்படும்.

No comments: