Pages

Wednesday, April 15, 2015

உற்சாகமாக இருக்க குளிர்ந்த நீரில் குளிக்கலாம்



மனித உடலுக்கு தண்ணீர் வைத்தியம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் உற்சாகமளிக்கக் கூடியதாகும். உங்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் சக்தி தேவை என்று நீங்கள் எண்ணினால், உற்சாகமின்மையால் அவதிப்படுவதாக நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு தேவையானது குளிர்ந்த நீர் வைத்தியம்தான். தண்ணீரில் வைத்தியம் என்றால் குளிக்கும் தொட்டியில் குளிர்ந்த நீரை நிரப்பிக் கொள்ளுங்கள். அதற்குள் இறங்கி படுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடம் தண்ணீருக்கும் உங்கள் உடல் முழுவதும் இருக்கும் விதத்தில் வைத்துக் கொண்டு உடலை ஆங்காங்கே உங்கள் கைகளால் தேய்த்து விடுங்கள். ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை இப்படி குளிர்ந்த தண்ணீரில் சோப் இன்றித் தேய்த்துக் குளிக்கும்போது நிணநீர் மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கி உள்ளே உள்ள உறுப்புகளை சுத்தம் செய்துவிடுகிறது. இதனால் இதயமும் சுறுசுறுப்படைகிறது. குளித்ததும் உடலை நன்கு துடைத்துவிடுங்கள். இதனால் அடுத்த பல மணி நேரம் சுறுசுறுப்பாகப் பணிபுரியலாம். 

No comments: