Pages

Saturday, November 29, 2014

தேங்காய் சாப்பிடுவது உடலுக்கு கெடுதியா?


தேங்காய் ஆபத்தானது என்று பலர் தவிர்க்கின்றனர். தேங்காயை சமையலில் உபயோகிப்பதில் தவறே இல்லை. அதை எப்படி உபயோகின்றோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது.

தினசரி 30 முதல் 40 கிராம் வரை தேங்காயை உபயோகிக்கலாம். அதை அப்படியே பச்சையாக சேர்த்துக் கொள்கிற வரை பிரச்சினையே இல்லை. துருவி பால் எடுத்து கொதிக்கவைக்கிற போதுதான் அதில் கொழுப்பு அதிகரிக்கிறது. அதே மாதிரிதான் கொப்பரையும். சில வகை உணவுகள், கொப்பரை சேர்ப்பதால் கூடுதலாக ருசிப்பதுண்டு.

அந்தக் கொப்பரைதான் கெடுதலே. தேங்காய் முற்றி கொப்பரயாகும் போது, அதிலுள்ள நல்ல தன்மைகள் மாறி, கொழுப்பு கூடுகிறது. கூடியவரை கொப்பரையை சமையலில்  சேர்க்காமலிருப்பதே நலம். மற்றபடி சமைக்காத தேங்காய் எல்லோருக்குமே நல்லதுதான். கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்கள் மட்டும் தேங்காயை தவிர்ப்பது பாதுகாப்பானது. தேங்காயை பால் எடுத்து உபயோக்கிறபோது அதிலுள்ள நார்ச்சத்தை எடுத்து விடுகிறோம். வெறும் கொழுப்பு மட்டுமே மிஞ்சி இருக்கும்.

தேங்காய் வயிற்றுப்புண்களை ஆற்றும் சக்தி உண்டு. அதனால் தான் வாயில் புண் வந்தால் கூட, தேங்காயை மென்று சாப்பிடச் சொல்கிறார்கள். அதன் பால் புண்ணில் பட்டால், சீக்கிரமே ஆறும். அல்சர் நோயாளிகளுக்கும் தேங்காய்பால் சேர்த்த உணவுகளை அதிகம் பரிந்துரைப்பதின் பின்னணியும் இதுதான்.

சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட் எனப்படும். கெட்ட கொழுப்பு அதிகம் என்பதே காரணம். கொப்பரை மற்றும் சமைத்த தேங்காயில் இது அதிகம். மற்றபடி குழந்தைகளுக்கு புரதம் மற்றும் கொழுப்பின் அளவை அதிகரிக்க தேங்காய் சேர்த்த பர்பி, தேங்காயும் வெள்ளமும் அதிகம் தரலாம்.

No comments: