இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கிரீம்கள் உடனடி பயன்பாட்டுக்குத்தான்
ஏற்றது. ஓரிரு நாட்கள் வைத்திருக்க வேண்டுமென்றால்கூட, அது சரி வராது.
உடனடியாக பயன்படுத்தும் வகையிலான பவுடர் மற்றும் பேர்னெஸ் கிரீம்
தயாரிக்கும் முறைகளை சொல்கிறேன்.
• முல்தானி மட்டி, சந்தன பவுடர்... இரண்டும் தலா 5 கிராம் எடுத்து, வட்டமான கிண்ணத்தில் போடுங்கள். இதன் ஓரத்தில் 10 துளிகள் ரோஸ் வாட்டரை விட்டு காற்று போகாத மூடியால் இறுக மூடி விடுங்கள். இந்தக் கலவை ஒரு மணி நேரத்தில் `கேக்' போன்று மாறிவிடும்.
முகத்தை நன்றாக கழுவி, ஒரு ஸ்பாஞ்ச்சினால் இந்த `கேக்'கைத் தொட்டு, இதை முகத்துக்குப் பூசுங்கள். கிரீம் போட்டது போல், முகம் பளிச்சென்று இருக்கும். விரும்புகிறவர்கள் இதற்கு மேல் பவுர் பூசிக் கொள்ளலாம்.

• முல்தானி மட்டி-ஒரு கிராம், சந்தன பவுடர்-10 கிராம், சிவப்பு சந்தன
பவுடர்- 2 கிராம்... இவற்றுடன் தேவையான அளவு ரோஸ் பவுடர் கலந்து வையுங்கள்.
வெளியில் செல்லும் போது இந்த பவுடரை பூசிக் கொள்ளலாம்.
கூடுதல் நேரம் முகத்தில் பவுடர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள், சிறிது வெண்ணெயை கையில் தடவி, அதே கையால் இந்த பவுடரை தேய்த்து முகத்தில் பூசலாம். நார்மல் மற்றும் உலர்ந்த சருமத்தினருக்கு ஏற்ற அலங்காரம் இது.
• எண்ணெய் பசை சருமத்தினர், முல்தானி மட்டிக்கு பதில், வெட்டிவேரை நைஸாக அரைத்து, சேர்த்து இந்த பவுடர் மற்றும் கிரீமை தயாரித்துக் கொள்ளலாம். வெட்டிவேர், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை ஈர்த்து, முகத்தை பிரகாசமாக்கிவிடும்.

No comments:
Post a Comment