Pages

Friday, September 12, 2014

புதினா கீரையின் மகிமைகள்!


புதினா கீரையை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகும். புதிய ரத்தம் பெருகும். ஏதாவது ஒரு காரணத்தினால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருந்தால், அப்போது புதினாக் கீரையை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்று போகும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்குக்கு புதினா கஷாயம் சிறந்த மருந்து. கர்ப்பிணிகளுக்கு இரண்டாவது மாதம் முதல் காலை நேரத்தில் வாந்தி ஏற்படும். சிலருக்கு ஆகாரம் உண்டவுடன் வாந்தி ஏற்படும்.

சில பெண்களுக்கு பிரசவம் ஆகும் வரை தொடர்ந்து வாந்தி இருக்கும். இம்மாதிரியான பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை கட்டுப்படுத்த  புதினாக் கீரை சிறந்த மருந்து. புதினாக் கீரையை இரண்டு அவுன்ஸ் எடுத்து, அதை 3 அவுன்ஸ் நீரில் 3 மணி நேரம் ஊற வைத்து, பின் நீரை தெளிய வைத்து குடித்து வந்தால் வயிற்றில் ஏற்படும் பொருமல், வாயுத் தொல்லை உள்ளிட்டவை குணமாகும்.

புதினாக்கீரையை துவையலாகவோ அல்லது பிற உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு குறைபாடு நீங்கும். புதினாக் கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ சாப்பிடுவதால் இதயம் தொடர்பான நோய்கள் விலகும்.

தொண்டைப் புண், மூச்சுத் திணறல் நோய்களுக்கு கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப்போடுவதால் குணம் தெரியும். புதினா இலையை நன்கு காயவைத்து போடி செய்து அதில் எட்டுக்கு ஒரு பாகம் உப்பு சேர்த்து நன்கு இடித்து கண்ணாடி ஜாடியில் போட்டு வைத்து பயன்படுத்தலாம். இதனால் பல் சொத்தை, பல் வலிக்கு தீர்வு ஏற்படும்.

No comments: