Pages

Tuesday, March 11, 2014

முகத்தை அழகாக்கும் ஃபேஸ் பேக்

முகம் பொலிவாக இருக்க வேண்டுமென்று எத்தனையோ செயல்களை பெண்கள் செய்வார்கள். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகுப்படுத்தினாலும், ப்ளீச்சிங் செய்யும் போது அதில் உள்ள கெமிக்கல்கள் சருமத்திற்கு சில சமயம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். ப்ளீச்சிங் அனைவருக்குமே சரியானதாக இருக்காது.

ஒரு சிலருக்கு முகத்தில் பருக்கள், வறட்சி போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே எப்போது முகத்தை அழகுப்படுத்த வேண்டும் என்று நினைத்தாலும், செயற்கை முறையை கடைபிடிக்காமல், இயற்கை முறையில் ஈடுபடுவது நல்லது. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ப்ளீச்சிங் செய்தால் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாது. 

முகத்தை அழகாக்கும் ஃபேஸ் பேக்


• ஆலிவ் ஆயிலில் பல விதமான நன்மைகள் அடங்கியுள்ளன. எப்படி அது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறதோ, அதே போல், சருமத்திற்கும் சிறந்தது. அதற்கு அந்த ஆலிவ் ஆயிலில், சிறிது சர்க்கரையை சேர்த்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கு முகம் பொலிவடையும்.

• சிட்ரஸ் பழத்தோல்களில் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது சருமத்தைப் பொலிவாக்க மிகவும் சிறந்தது. எனவே சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தின் தோலை சூரிய வெப்பத்தில் 2 நாட்கள் காய வைத்து, பொடி செய்து, அதோடு மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, பேஸ்ட் போல் செய்து கொண்டு, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இவ்வாறு செய்வதால் முகம் பளிச்சென மாறுவதை பார்க்கலாம்.

• தக்காளி போன்ற நிறம் வேண்டுமென்றால், தக்காளி ப்ளீச் செய்யலாம். அதற்கு தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின் கழுவினால் முகம் பட்டுப் பொன்று மின்னும்.

• வெள்ளரிக்காயின் சிறிது துண்டை எடுத்து அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு மாஸ்க் போன்று போட்டு, ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகம் பொலிவோடு காணப்படும்.

• சருமம் மந்தமாக எந்த ஒரு பொலிவுமின்றி பருக்களுடன் காணப்பட்டால், அதற்கு வெள்ளை வினிகர் ப்ளீச் சிறந்ததாக இருக்கும். இதில் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தை பளிச்சென்று, எந்த ஒரு பிரச்சனையுமின்றி பொலிவாக்கும். அதற்கு வினிகரை காட்டனில் நனைத்து, முகத்தை துடைக்க வேண்டும். இதனால் சருமம் இயற்கையாக பக்கவிளைவுகளின்றி பொலிவாகும்.

No comments: