தேவையான பொருட்கள்:
ஆட்டுக் கறி - 1/2 கிலோ
வெங்காயம் - 2
பூண்டு - 3
இஞ்சி - 1 1/2 அங்குலத் துண்டு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 குழிக்கரண்டி
பொடித்துக் கொள்ள:
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
இஞ்சியையும் பூண்டையும் மைய அரைக்காமல் பிசிறாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
சூடான குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் தட்டிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அத்துடன், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்நிறமானதும் ஆட்டுக் கறியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
கறி சற்று வெந்து, அதன் நிறம் மாறத் துவங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். அத்துடன் உப்பு சேர்த்துக் கலந்து சிறிதுநேரம் மூடி வைக்கவும். கறி சற்று வெந்ததும் பொடித்து வைத்துள்ள காய்ந்த மிளகாய், மிளகு, கொத்தமல்லி, சீரகக் கலவையை சேர்த்துக் கலந்து குக்கரை மூடி வேக விடவும்.
3 அல்லது 4 விசில் வந்தவுடன் இறக்கவும். குக்கரில் அதிகம் தண்ணீர் இருந்தால் சிறிது நேரம் குறைந்த தீயில் வைத்து, கலவை கெட்டியாகி, மசாலா கறியுடன் சேரும் வரை வதக்கவும். கிரேவியாகவே வேண்டுமானால் அப்படியேவும் வைத்துக் கொள்ளலாம். வித்தியாசமான வண்ணத்துடன் சுவையும் அமர்க்களமாய் இருக்கும்.
No comments:
Post a Comment