Pages

Friday, September 20, 2013

வெளியே பயணம் செய்யும்போது.....


கூடியவரை வெளியே பயணம் செல்லும்போது வீட்டில் தயார் செய்த உணவு வகைகள், சிற்றுண்டி ஆகியவற்றை எடுத்து செல்வது நல்லது. வெளியே சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், எளிதில் ஜீரணமாக கூடிய சிற்றுண்டி வகைகளை சாபிடுவது நல்லது. எண்ணையில் பொறித்தவை, கிழங்குகள் சேர்த்தவை, மசாலா பொருட்கள் சேர்த்தவை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

வெளியில் கிடைக்கும் பால், மோர் ஆகியவற்றைப் பக்குவப்படுத்தித் தயார் செய்யப்பட்டதை உறுதி செய்து கொண்டே சாப்பிட வேண்டும். தரமான உணவகங்களில் மட்டுமே சாப்பிட வேண்டும். தாகம் வந்தால் இளநீர் சாப்பிடுவது நல்லது. பான வகைகளில் சோடா, கோலா போன்ற வகைகளை சாப்பிடலாம். தெரியாத உணவகங்களில் பழரசங்களை வாங்கிச் சாப்பிட கூடாது.

கூடியவரை தூய நீர் பாட்டில்களில் உள்ள நீரையே குடிக்க வேண்டும். ஓட்டல்களிலோ, தெருவிலோ கிடைக்கும் தண்ணீரில் வாய் கொப்பளிக்கலாம். குடிக்காமல் தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்குக் கூடியவரை இத்தகைய நீரைப் பயன்படுத்தக் கூடாது.

வயதானவர்களும், உடல் நலம் இல்லாதவர்களும் பயணம் செய்யும்போது, தமக்கு உரிய உணவு மருந்துகள் ஆகியவற்றை டாக்டரிடம் கேட்டு, தயாராக எடுத்துச் செல்ல வேண்டும். மருந்துகளை தாமே உபயோகிக்க கூடாது.

கூடியவரை தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் வீட்டிலேயே சாப்பிடுங்கள். வெளிய உணவகங்களில் சாப்பிடுவதை அளவுபடுத்தி கொள்ளுங்கள். மாமிச உணவுகளை பிரயாணத்தின்போது தவிர்ப்பது நல்லது.

No comments: