உளுந்து வடை | | |
தேவையான பொருட்கள்
உளுந்தம் பருப்பு - 2 கப்
வெங்காயம் - 1/4
பச்சை மிளகாய் - 1
மிளகு - 1/2 தேக்கரண்டி
கேரட் - கொஞ்சம் ( optional)
சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
உளுந்தை 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற விட்டு , கூடுதல் தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அதோடு வெங்காயத்தையும்,பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி ,மேலே கூறிய இதர பொருட்களையும் சேர்த்து கலக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு கைகளில் தண்ணீர் தொட்டு மாவை தட்டவும்.நடுவில் குழி போட்டு எண்ணெயில் போடவும்
மறுபக்கம் திருப்பி போட்டுபொரிந்த்தும் எடுக்கவும்
உளுந்து வடை ரெடி, சூடாக சட்னியுடன் பரிமாறவும்
No comments:
Post a Comment