ஹோம் ஃபேஷியல் (சமையலறையில் இருக்கு ஃபேஷியல் அயிட்டம்)(க்ளென்சிங் மில்கிற்கு பதிலாக)
சிறிதளவு பால், கொஞ்சம் கோதுமை மாவு, கொஞ்சம் சர்க்கரை
பேக் போடுவதற்கு
முட்டையின் வெள்ளைக் கரு
முல்தானி மட்டி சிறிதளவு (பன்னீரில் கரைத்துக்கொள்ள வேண்டும்)
கஸ்தூரி மஞ்சல்
தேன் - 1 ஸ்பூன்
லெமன் ஜூஸ்
அனைத்தையும் நன்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.பேஷியல் ஆரம்பிக்கும் முன் ப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.
பேஷியல் செய்முறை :
1) தலை முடியை நன்றாக வாரி உச்சியில் கொண்டையாக க்ளிப் செய்து விடுங்கள். முதலில் கழுத்து, முகத்தை நன்றாக சோப் போட்டு கழுவுங்கள்.
2) முதலில் பாலை 2 விரல்களால் தொட்டு, அடுத்து கோதுமை மாவில் தொட்டு, பிறகு சீனியில் தொட வேண்டும். இதனை கழுத்து, முகத்தில் தடவ வேண்டும். ஒவ்வொரு முறையும் பால்,மாவு, சீனீயை இவ்வாறு தொட்டு கன்னங்களில் வட்ட வடிவமாகவும். மூக்கின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு விரல்களினால், மேலும், கீழுமாகவும், நெற்றியில் வட்ட வடிவமாகவும், தாடையில் அடிப்பகுதியை கீழ்ப்புறமாகவும், மேல் பகுதியை வட்ட வடிவமாகவும் தடவுங்கள். கழுத்தில் மேல் புறமாக தடவுங்கள்.
3) இப்போது கண்ணங்களை வட்ட வடிவமாகவும், கண்களை சுற்றி வட்டமாகவும், மெதுவாகவும், தாடையை கீழிருந்து மேலாகவும், நெற்றியில் நடுவில் ஆரம்பித்து புருவம் முடியும் வரை கீழாகவும், மீண்டும் கன்னங்களை மேல் புறமாக நன்றாக அழுத்தமாகவும் , உதடுகளில் வட்ட வடிவில், உதடுகளின் ஓரங்களில் நீள்வட்டமாகவும் மசாஜ் செய்யுங்கள். கழுத்தில் எப்போதும் மேல் புறமாக செய்யுங்கள். மசாஜ் செய்யும் போதே முகத்தை செல்லமாக கிள்ளுவது போல செய்யுங்கள்.
4) ஒரு பாத்திரத்தில் கொதிக்கின்ற தண்ணீர் எடுத்து அதில் முகத்தை காட்டி போர்வையால் நன்றாக மூடி ஆவி பிடியுங்கள். முகத்திலிருந்து தண்ணீர் வியர்வையாக வெளிவரும் வரை ஆவி பிடியுங்கள். பின்பு மூக்கின் ஓரங்களில் மெதுவாக அழுத்துங்கள். மூக்கின் நுனியில் இருக்கு பிளாக் ஹெட்ஸை ஒரு டிஷ்யூ கொண்டு துடைத்து விடுங்கள்.இவ்வாறே தாடையில் இருக்கும் அழுக்கையும் நீக்குங்கள்.
5) பிரிட்ஜிலிருந்து பேக்கை எடுத்து கழுத்து, முகத்தில் போடவும். பேக் காயும்வரை வைத்திருந்து கழுவவும். பேக் போட்டு இருக்கும் போது அதிகம் பேசவோ, சிரிக்கவோ கூடாது, பேஷியல் செய்த பிறகு 8 மணி நேரம் முகத்திற்கு எதுவும் போடாதீர்கள்.
செய்து பாருங்கள் ரொம்ப ஈஸி without side effect