Healthy Tips, Natural Beauty, Beauty Tips, Beauty care Skin Care, Hair Beauty, Vegetable Recipes, Natural Food, Indian Recipes, New Recipes, Easy Recipes, Healthy Recipe, Cookery, Healthy Food, Breakfast Recipes, Top Secret Recipes --Visit this blog to know more!
Thursday, December 7, 2023
SIP திட்டத்தில் முதலீடு செய்ய போறீங்களா? இந்த 5 தப்பை மட்டும் பண்ணவே பண்ணாதீங்க..!!
கடந்த சில ஆண்டுகளாக மக்கள் எஸ்ஐபி மூலம் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. எஸ்.ஐ.பி. வாயிலாக சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை அவரவர் தங்களது வசதிக்கேற்ப மாத மாதம் முதலீடு செய்து கொள்ளலாம்.
மாத மாதம் முதலீடு செய்யும் தொகை சிறிய அளவிலிருந்தாலும் அது
மிகப்பெரிய செல்வத்தை உருவாக்க முடியும். எஸ்.ஐ.பி. மூலம் உங்கள் வருவாயை
அதிகரிக்க முதலீட்டாளர்கள் செய்யும் பொதுவான 5 தவறுகளை தவிர்ப்பது
முக்கியம். அவை என்னவென்று பார்ப்போம்.
தெளிவான நிதி இலக்கு : முதலீட்டாளர்கள் செய்யும் பொதுவான தவறுகளில்
ஒன்று என்னவென்றால், எதற்காக முதலீடு செய்யப்போகிறோம், எவ்வளவு முதலீடு
செய்ய முடியும் மற்றும் எவ்வளவு லாபம் வேண்டும் என்ற விஷயங்களில் தெளிவான
நிதி இலக்கு இல்லாமல் முதலீடு செய்கின்றனர்.
எஸ்.ஐ.பி. (SIP) திட்டத்தை தேர்ந்தெடுக்கவும், உங்கள் முதலீடுகளில் கவனம்
செலுத்தவும் தெளிவான நிதி இலக்கை கொண்டிருப்பது மிகவும் அவசியம். அதனால்
எஸ்.ஐ.பி. திட்டத்தில் முதலீடு செய்வதை தொடங்குவதற்கு முன், ஏன் முதலீடு
செய்கிறீர்கள் என்பதை முதலில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
எஸ்.ஐ.பி. முதலீடு வாயிலாக நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள்? ஓய்வு
காலத்துக்காகவோ, வீடு வாங்குவதற்காகவோ அல்லது உங்கள் பிள்ளையின்
கல்விக்காகவோ எதற்காக சேமிக்கிறீர்கள்? என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
முதலீட்டு தொகை : எஸ்.ஐ.பி.க்கு ஒதுக்கும் தொகை தங்களது நிதி இலக்குகள்
மற்றும் ரிஸ்க் சகிப்புத்தன்மைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதை
முதலீட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். மிகக் குறைவாக முதலீடு செய்வது
நிதி இலக்குகளை எட்ட முடியாமல் போவதற்கு வழிவகுக்கும் மற்றும் நீண்ட
காலத்திற்கு விரும்பிய வருமானத்தை அளிக்காது.
அதேசமயம் நீங்கள் அதிகமாக முதலீடு செய்தால், உங்கள் மாதாந்திர செலவுகளை
சமாளிப்பது சவாலாக இருக்கும், இது உங்கள் நிதி ஸ்திரத்தன்மையை பாதிக்கும்.
எனவே உங்களது முதலீட்டு யுக்தியின் வெற்றிக்கு சரியான சமநிலையை அடைவது
முக்கியமாகும்.
முதலீட்டை பிரித்தல் : முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பல்வேறு
திட்டங்களில் பிரித்து போட்டு முதலீட்டை பல்வகைப்படுத்துதல் அவசியம்.
பல்வேறு எஸ்.ஐ.பி. திட்டங்கள் அல்லது நிதிகளில் உங்கள் முதலீடுகளை
பல்வகைப்படுத்ததல் என்பது பங்கு, கடன் பத்திரங்கள் மற்றும் ஹைப்ரிட்
பண்டுகள் உள்பட பல்வேறு சொத்துக்களில் உங்கள் பணத்தை பிரித்து போடுவதாகும்.
பயனுள்ள இடர் மேலாண்மை மற்றும் ஒட்டு மொத்த வருவாயை மேம்படுத்த உங்கள்
முதலீடுகளை பல்வகைப்படுத்துதல் அவசியம். அதேசமயம் முதலீட்டை அதிக அளவில்
பல்வகைப்படுத்தினால் குறைந்த வருமானத்துக்கும் வழிக்கும். அதேபோல் எல்லா
பணத்தையும் ஒரே திட்டம் அல்லது நிதியில் முதலீடு செய்வது தேவையற்ற ஆபத்தில்
உங்களை தள்ளக்கூடும்.
போர்ட்போலியோ மதிப்பீடு : எஸ்.ஐ.பி. கள் நீண்ட கால செயல்முறையாகத்தான்
மேற்கொள்ள வேண்டும் என்றாலும் நிலையான கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு
அவசியம். வெற்றிக்கரமான எஸ்.ஐ.பி. முதலீட்டிற்கு உங்கள் போர்ட்போலியாவை
அடிக்கடி ஆய்வு செய்து, தேவைப்பட்டால் மாற்றங்களை செய்வது முக்கியம்.
உங்கள் நிதிநிலைமை, சந்தை நிலைமைகள் மற்றும் நிதி மேலாண்மை
ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு உங்கள் முதலீட்டு
உத்தியில் மாற்றங்களை செய்ய வேண்டும்.
அதிக வருமான ஆசை : அதிக வருமானத்தை ஈட்ட வேண்டும் என்ற ஒரே
குறிக்கோள்களுடன் எஸ்ஐபி வாயிலாக முதலீடு செய்வது முதலீட்டாளர்கள் செய்யும்
பொதுவான தவறு மற்றும் ஆபத்தானது. அதிக வருமானம் பெரும்பாலும் அதிக
ரிஸ்க்குடன் வரும் மற்றும் நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்காது.
முதலீடு செய்வதற்கு முன் அவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும்
முதலீட்டு உலகில் எதுவும் இலவசம் இல்லை என்பதை எற்றுக்கொள்வதும் முக்கியம்.
Wednesday, December 6, 2023
Subscribe to:
Posts (Atom)